தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம் என பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்த பிரபல நடிகை ஸ்ரீதேவி (54) நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் மாரடைப்பு காரணமாக உயிர் இழந்தார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உயிர் பிரிந்த நிலையில்தான் ஸ்ரீதேவியின் உடல் துபாயில் உள்ள ரஷித் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. தற்போது ஸ்ரீதேவியின் உடல் அல் குவாசிஸ் பகுதியில் உள்ள காவல்துறை பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடல் தடயவியில் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


பிரேத பரிசோதனை குறித்த முழு அறிக்கை தயாராகாததால், ஸ்ரீதேவியின் உடலை இந்தியா கொண்டு வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக துபாய் காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.


துபையில் ஸ்ரீதேவி மரணத்துக்கான தடவியல் அறிக்கை ஒப்படைக்கப்பட்டதும் உடல் எம்பாமிங் செய்ய முஹாய்ஸ்னாவுக்கு (Muhaisna) எடுத்துச் செல்லப்படும். பிறகு காவல்துறையினர் இறப்புச் சான்றிதழ் அளிக்கவேண்டும். 


இந்த நாட்டு சட்டப்படி ஒருவர் 24 மணி நேரம் மருத்துவமனையில் இருந்து உயிரிழந்தால் மட்டுமே அது சிகிச்சை பலனின்றி இறந்ததாக இயற்கை மரணமாக கருத்தில் கொள்ளப்பட்டு எந்தவித தடங்கலும் இன்றி உடனடியாக உடல் ஒப்படைக்கப்படும். ஆனால் நடிகை ஸ்ரீதேவி மருத்துவமனைக்கு வந்த ஒரு மணி நேரத்தில் இறந்துவிட்டார்


அதனால் அவர் சாப்பிட்ட உணவு முதல் தங்கியிருந்த சூழல், இயற்கையான மாரடைப்பா..? செயற்கையான முறையில் ஏதேனும் செய்யப்பட்டுள்ளதா என முழுமையாக விசாரித்த பிறகே மருத்துவ அறிக்கை கிடைக்கும். 


இந்தச் சான்றிதழ் அளிக்கப்பட பிறகு துபையின் குடியேற்றத் துறை உடலை அனுப்புவதற்கான நடைமுறைகளை மேற்கொள்ளும். இறப்புச் சான்றிதழ் கிடைத்தபிறகு, ஸ்ரீதேவின் பாஸ்போர்ட்டை இந்தியத் தூதரகம் ரத்து செய்ய வேண்டும். உடலை ஒப்படைக்க அரசு வழக்கறிஞர் அனுமதியளிக்கவேண்டும். பிறகு அவரது உடல் தனி விமானம் மூலம் கொண்டுவரப்படும் என்றது. 


இதனால், அவரது உடலை காண வேண்டும் என்பதற்காக மும்பை அந்தேரியில் உள்ள லோகன்ட்வாலா காம்ப்ளஸில் உள்ள அவரது வீடு முன்பு திரண்டுள்ள ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.