ஸ்ரீதேவியின் உடலுக்கு உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு, இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. இதை தொடர்ந்து, இன்று அவரது உடல் மாலை 3.30 மணிக்கு துபாயிலிருந்து அவரது உடல் மும்பைக்கு இரவு 7 மணிக்கு கொண்டு வரப்படுவதாக தகவல்கள் வெளியாகின. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 


தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம் என பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்த பிரபல நடிகை ஸ்ரீதேவி (54) நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் மாரடைப்பு காரணமாக உயிர் இழந்தார்!


துபாயில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சென்ற ஸ்ரீதேவி, திடீரென உயிரிழந்துள்ளதாக அவரது குடும்பத்தினர் உறுதிப்படுத்தினர். 


இந்நிலையில், அவரது உடலுக்கு உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு, இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.


இதை தொடர்ந்து, இன்று அவரது உடல் மாலை 3.30 மணிக்கு துபாயிலிருந்து அவரது உடல் மும்பைக்கு இரவு 7 மணிக்கு கொண்டு வரப்படுவதாக தகவல்கள் வெளியாகின. 


உடற்கூறு ஆய்வறிக்கை அளிக்கப்பட்டதால் உடலை எம்பாமிங் (பதப்படுத்தல்) பணி தொடங்கப்படும். உடற்கூறு ஆய்வறிக்கையின் நகல் ஒன்று ஸ்ரீதேவியின் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.


உடற்கூறு ஆய்வறிக்கையை துபாய் போலீஸிடம் ஒப்படைத்த பிறகே அவரது உடல் எப்போது இங்கிருந்து கொண்டு செல்லப்படும் என்பது தெரியவரும். இன்று இரவு அவரது உடல் மும்பைக்கு கொண்டு செல்லப்படும் என்று தெரிகிறது. இதைத் தொடர்ந்து நாளை அவரது உடலுக்கு இறுதிச் சடங்குகள் நடத்தப்படும்.


இந்நிலையில், ஸ்ரீதேவியின் உடலை எடுத்து வருவதற்கான வேலைகள் இன்னும் சில மணிநேரங்களில் தொடங்கும் என இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. தடயவியல் அறிக்கை கிடைத்தவுடன் இந்திய நேரப்படி 3.30 மணியளவில் அவரது உடல் துபாயிலிருந்து எடுத்துவரப்படும் என இந்திய வெளியுறவுத்துறை உறுதிப்படுத்தியுள்ளது.