சட்டசபை தேர்தல் நடந்து முடிந்துள்ள தெலங்கானா, மத்தியபிரதேசம், சத்தீஷ்கார், ராஜஸ்தான், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சத்தீஷ்கர் | 90 தொகுதிகள் கொண்ட சத்தீஷ்கர் மாநிலத்தில் கடந்த நவ., 12 மற்றும் நவ., 20 ஆகிய இது தேதிகளில் இரண்டு கட்டமாக வாக்குப்பதிவு நடைப்பெற்றது.


மத்திய பிரதேசம் | 230 சட்டமன்ற தொகுதிகள் கொண்ட மத்திய பிரதேசம் மாநிலத்தில் நவம்பர் 28, 2018 வாக்குப்பதிவு நடைப்பெற்றது.


ராஜஸ்தான் | 200 சட்டமன்ற தொகுதிகள் கொண்ட ராஜஸ்தான் மாநிலத்தில் டிசம்பர் 7, 2018 வாக்குப்பதிவு நடைப்பெற்றது.


  • மத்தியபிரதேசம், சத்தீஷ்கார், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் ஆளும் பாரதீய ஜனதாவுக்கும், காங்கிரசுக்கும் இடையேதான் கடும் போட்டி நிலவுகிறது.

  • கடந்த 2014-ஆம் ஆண்டில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் மத்தியபிரதேசம், சத்தீஷ்கார், ராஜஸ்தான் ஆகிய 5 மாநிலங்களில் மொத்தம் உள்ள 65 தொகுதிகளில் 63 தொகுதிகளை பாரதீய ஜனதா கைப்பற்றியது. இந்த மாநிலங்களில் தற்போது பாரதீய ஜனதா ஆட்சி நடைபெற்று வருவதால், இந்த 3 மாநிலங்களின் தேர்தல் முடிவு பாரதீய ஜனதா கட்சியை பொறுத்தவரை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.


மிசோரம் | 40 சட்டமன்ற தொகுதிகள் கொண்ட மிசோரம் மாநிலத்தில் நவம்பர் 28, 2018 வாக்குப்பதிவு நடைப்பெற்றது.


  • மிசோரம் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ், எதிர்க்கட்சியான மிசோ தேசிய முன்னணி ஆகியவை மொத்தம் உள்ள 40 தொகுதிகளிலும் போட்டியிட்டன. 

  • பாரதீய ஜனதா 39 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியது. 

  • இம்மாநிலத்தில் 13 மையங்களில் வாக்குகள் எண்ணிக்கை நடைப்பெறுகின்றது.


தெலங்கானா | 119 சட்டமன்ற தொகுதிகள் கொண்ட தெலங்கான மாநிலத்தில் டிசம்பர் 7, 2018 வாக்குப்பதிவு நடைப்பெற்றது.


  • தெலுங்கானா மாநிலத்தில் முதல்வராக இருந்த தெலுங்கானா ராஷ்டிர சமிதியின் தலைவர் சந்திரசேகர ராவ் சட்டசபையை முன்கூட்டியே கலைத்துவிட்டு தேர்தலை எதிர்கொண்டார். 

  • தெலுங்கானா ராஷ்டிர சமிதி, காங்கிரஸ்-தெலுங்குதேசம், பாரதீய ஜனதா ஆகிய 3 அணிகள் இம்மாநிலத்தில் போட்டியிட்டன. 

  • மொத்தமுள்ள 119 தொகுதிகளில் 1,821 வேட்பாளர் போட்டியிட்டனர். 43 மையங்களில் ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது.


இந்த 5 மாநிலங்களிலும் மொத்தம் 679 சட்டசபை தொகுதிகள் உள்ளன. 8,500-க்கும் அதிகமான வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர். 1,74,000-க்கும் அதிகமான வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. ஓட்டுப்பதிவுக்கு பின்னர் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டன.


வாக்குப்பதிவு நடைப்பெற்ற 5 மாநிலங்களிலும் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை துவங்குகிறது. இதன்காரணமாக வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.