பசிக் கொடுமையால் மண்ணை தின்ற இரண்டு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கர்நாடகா மாநிலாத்தை சேர்ந்த மகேஷ்- நாகமணி ஆகியோர் வயிற்று பிழைப்புக்காக தங்களின் 6 குழந்தைகளுடன் ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்திற்கு குடிபெயர்ந்துள்ளனர். நீலவேணியின் சகோதரி மகளான வெண்ணிலாவையும் அத்தம்பதியினர் வளர்த்து வந்துள்ளனர். 


இந்நிலையில் வெண்ணிலா பசிக்கொடுமையால் சாப்பாடு இல்லாமல் அடிக்கடி மண்ணை அள்ளி தின்றதில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். கடந்த 6 மாதங்களுக்கு முன்னதாக தம்பதியினரின் மகனான சந்தோஷ், சாப்பாடு இல்லாமல் பசிக்கொடுமையால் உயிரிழந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு குழந்தை உயிரிழந்துள்ளது. இரண்டு குழந்தைகளும் ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகள். இதையடுத்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற உள்ளூர் அதிகாரிகள், மற்ற 4 குழந்தைகளையும் உடடினயாக மீட்டு அரசு சார்பில் நடத்தப்படும் சிறுவர்களுக்கான காப்பகத்தில் ஒப்படைத்தனர். 


மகேஷ் மற்றும் நாகமணி இருவரும் மதுபோதைக்கு அடிமையானவர்கள் என அக்கம்பக்கத்தினர் தெரிவித்துள்ளனர். மேலும், தாங்கள் சம்பாதிக்கும் சிறு பணத்தையும் குடிப்பதற்கே செலவிட்டுள்ளனர். குழந்தைகளின் பசியையும் அவர்கள் பொருட்படுத்தவில்லை. இதை தொடர்ந்து, அவர்களை மதுபோதை மறுவாழ்வு மையத்திற்கு அனுப்பி வைத்தனர்.