குழந்தையின் குடலை உருவிய நாய்! நாய்டாவில் நடந்த பயங்கர சம்பவம்!
உத்திர பிரதேசத்தின் நொய்டா செக்டார் 100 பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில், 18 மாத குழந்தை தெருநாய்களால் தாக்கப்பட்டு இறந்தது. அதிர்ச்சியூட்டும் வகையில், குழந்தையை தாக்கிய நாய்கள் குடலை கிழித்துள்ளன.
உத்தரபிரதேசத்தின் காசியாபாத் நகரில் பல இடங்களில் ஆக்கிரோஷமான நாய் இனங்களின் தாக்குதல் அதிகரித்து வந்ததை அடுத்து, உத்தரபிரதேச அதிகாரிகள் குறிப்பிட்ட நாய் இனங்களை தடை செய்ய முடிவு செய்தனர். இந்நிலையில், மற்றொரு கொடூர சம்பவமாக, உத்திர பிரதேசத்தின் நொய்டா செக்டார் 100 பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில், 18 மாத குழந்தை தெருநாய்களால் தாக்கப்பட்டு இறந்தது. அதிர்ச்சியூட்டும் வகையில், குழந்தையை தாக்கிய நாய்கள் குடலை கிழித்துள்ளன. இச்சம்பவம் குடியிருப்பில் வசிப்பவர்களுக்கும், வளாகத்திற்குள் விலங்குகளுக்கு உணவளிக்கும் நாய் பிரியர்களுக்கும் இடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
18 மாத குழந்தை அரவிந்த் என அடையாளம் காணப்பட்ட குழந்தை தான் நாய்கள் தாக்கியதில் இறந்தது. அவரது தாயார் சப்னா தேவி, தினசரி கூலி வேலைக்குச் சென்றதால், குடியிருப்பு பகுதிவிளையாடிக் கொண்டிருந்தார். குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். பாதிக்கப்பட்டவ குழந்தை நொய்டாவின் யதார்த் மருத்துவமனையில் மாலை 6.30 மணியளவில், வயிற்றில் இருந்து குடல் வெளியே தள்ளப்பட்ட நிலையில் அனுமதிக்கப்பட்டது.
மருத்துவர்கள் அவருக்கு பல அறுவை சிகிச்சைகள் செய்தும் அவரை காப்பாற்ற முடியவில்லை. குடியிருப்பில் பல ஆண்டுகளாக தெருநாய்கள் ஒரு தொழிலாளியின் குழந்தை உட்பட பலரைத் தாக்கியதாக சங்கத்தில் வசிப்பவர்கள் கூறுகின்றனர். அவர்கள் நாய்களை அகற்ற நடவடிக்கை எடுத்த போது, நாய் பிரியர்களின் அழுத்தம் காரணமாக நடவடிக்கையை கை விட நேர்ந்தது.
தேசிய தலைநகர் பிராந்தியத்தில் (NCR) நாய்கள் தாக்குதலின் பல அறிக்கைகள் வெளிவந்துள்ளன. கடந்த வாரம், காசியாபாத் நகராட்சி அமைப்பு பிட்புல் மற்றும் ராட்வீலர் போன்ற ஆக்கிரமிப்பு இனங்களை தடை செய்தது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் பிட்புல் நாய் ஒன்று தனது வயதான உரிமையாளரைக் கொன்றது. பல இடங்களில் ஆக்கிரோஷமான நாய் இனங்களின் தாக்குதல் அதிகரித்து வந்ததை அடுத்து, உத்தரபிரதேச அதிகாரிகள் காசியாபாத் நகரில் குறிப்பிட்ட நாய் இனங்களை தடை செய்ய முடிவு செய்தனர். கொடூரமான நாய் தாக்குதல்கள் காரணமாக காஜியாபாத்தில் மொத்தம் மூன்று இனங்கள் தடை செய்யப்பட்டுள்ளன.
காஜியாபாத்தில் தடைசெய்யப்பட்ட மூன்று நாய் இனங்கள் பிட்புல்ஸ், ராட்வீலர்ஸ் மற்றும் டோகோ அர்ஜென்டினோ. இந்த மூன்று இனங்களும் மிகவும் ஆக்ரோஷமானவை மற்றும் ஆபத்தானவை என்று கருதப்படுகின்றன, இந்த இனங்களின் சில நாய்கள் பல கொன்ற சம்பவங்கள் குறித்த அறிக்கை பதிவாகியுள்ளன.
மேலும் படிக்க | ஜம்மு காஷ்மீரில் லஷ்கர் பயங்கரவாத தாக்குதல்! புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இருவர் பலி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ