ராஜஸ்தான்: ராஜஸ்தான் மாநிலம் பாரத்பூரில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் 9-ஆம் வகுப்பு மாணவனை, அவரது ஆசிரியர் தாக்கிய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வகுப்பில் கூச்சலிட்ட மாணவரை ஆசிரியர் கண்டித்துள்ளார். மாணவர் ஆசிரியருக்கு அடங்காமல் தொடர்ந்து கூச்சலிட ஆத்திரமடைந்த ஆசிரியர், மாணவரின் மீது தனது கைப்பேசியை எறிந்துள்ளார்.


இதனால் காயமடைந்த மாணவர் மருத்துவமணையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.



இச்சம்பவம் தொடர்பாக ஆசிரியர் மீது வழக்கு தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.