மத்திய பிரதேசத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக பெருக்கெடுத்து ஓடும் ஆற்று வெள்ளத்தில் மாணவர்கள் உயிரை பணையம் வைத்து பள்ளி செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மத்திய பிரதேச மாநிலம் தமோ நகரின், ஹட்டா மடியாடோ பகுதியில் அமைந்த பள்ளி கூடத்திற்கு தினமும் மாணவ மாணவிகள் சென்று வருகின்றனர். மாணவர்கள் செல்லும் வழியில் இருக்கும் சிறிய ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் ஆற்றை கடக்க தங்கள் உயிரை பணையம் வைக்க வேண்டியுள்ளது. 



ஆற்றை கடந்து செல்ல ஏதுவாக பாலம் கட்டப்பட்டு வரும் போதிலும், இப்பணி நீண்ட நெடு நாட்களாக நடைப்பெற்று வருவதால், மாணவர்கள் தொடர்ந்து அவதிக்குள்ளாகி வருகின்றனர்.


இதுகுறித்து ஆற்றினை தினமும் கடந்து செல்லும் பள்ளி மாணவ, மாணவிகள் தெரிவிக்கையில்... பாலம் கட்டம் பணி நெடு நாட்களாக நடைப்பெற்று வருகின்றது. இதனால் மழை காலங்களில் ஆற்றை கடப்பது மிகவும் கடணமாக ஒரு விஷசமாக மாறி விடுகிறது.



இந்த விவகாரத்தில் அரசு கவனம் செலுத்தி விரைவில் இந்த பிரச்சனைக்கான தீர்வினை கொண்டு வர வேண்டும் என தெரிவித்துள்ளனர்!