தெலுங்கானாவில் சாய்தாபாத்தில் 10 வகுப்பு பயிலும் மானவி திடீரென தற்கொலை செய்துகொண்டுள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பலியானவரின் பெயர் 16 வயதான சுஷ்மா என அடையாளம் காணப்பட்டுள்ளது. சாய்தாபாத் அரசு பள்ளியில் 10 ஆம் வகுப்பு பயிலும் இவர் பள்ளியில் இருந்து திரும்புகையில் அளவுக்கு அதிகமாக விசம் அருந்தியதாகவும், பின்னர் வீட்டின் கழிப்பறையில் சுயநினைவின்றி மாலை 6.30 மணியளவில் கண்டெடுக்கப்ட்டார் எனவும் பெற்றோர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பின்னர் சிகிச்சைக்காக இவரை மருத்துவமனைக்கு கொன்டுசென்ற போதிலும் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பலியானார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இவர் அருந்திய விசமானது, அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் இருந்து பெறப்பட்டுள்ளது என காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இவரின் தற்கொலைக்கான காரணம் குறித்து அவர்களது பெற்றோரிடம் கேட்கையில் அவர்களிடம் எந்தொரு சலனமும் இல்லை, மேலும் இச்சம்பவம் தொடர்பாக எங்களுக்கு யார்மீதும் சந்தேகம் இல்லை எனவும் தெரிவித்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த இந்த வழக்கு குறித்து மர்மங்கள் நீண்ட வண்னம் உள்ளது, எனினும் இந்த வழக்கின் முடிவினை நோக்கி நாங்கள் பயணித்துக்கொண்டு இருக்கின்றோம் எனவும் காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது!