டெல்லி மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகத்தில் நடிகை சன்னி லியோன் தனது மெழுகுச் சிலையைத் திறந்து வைத்தார்...! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாலிவுட் திரையுலகின் பிரபலமாணவர்களில் முக்கியமானவர் சன்னிலியோன். அவரது முகத்திற்கு பின்னால் பலதர விமர்சனங்கள் வைக்கப்பட்டாலும் அவரது வாழ்க்கை பயணம் என்பது அவரக்கு எளிமையானதாக அமைந்துவிடவில்லை என்பதை யாரும் உணர தயாராக இல்லை. தமிழில் வடகறி படத்தில் நடனமாடிய சன்னிலியோன், வீரமாதேவி என்ற படத்திலும் நடித்து வருகிறார். 


பாலிவுட் திரைவுலகில் நுழைந்த பின்னர் விரைவிலே பெரும் புகழை அடைந்துவிட்டார் அவர். இந்நிலையில் அவரது வாழ்க்கை வரலாற்றினை Zee குழுமத்தின் டிஜிட்டல் தளமான ZEE5 ஒளிப்பரப்ப உள்ளதாக ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில், கடந்த ஜூலை 16 ஆம் தேதி 'தி அன்டோல்ட் ஸ்டோரி ஆஃப் சன்னி லியோன்'-னின் வாழ்க்கை வரலாற்று தொடர் வெளியானது.


ஹிந்தியில் வெளியான இந்த வாழ்க்கை வரலற்றுத் தொடர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றது. இந்நிலையில், சன்னிலியோனின் வாழ்க்கை தொடரான 'தி அன்டோல்ட் ஸ்டோரி ஆஃப் சன்னி லியோன்'-னின் இரண்டாம் பாகம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது.  


இந்நிலையில், டெல்லியில் உள்ள மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகத்தில் சன்னிலியோனின் மெழுகுச் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதனைத் திறந்து வைப்பதற்காக வந்த சன்னிலியோனை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டனர்.




இதனைத் தொடர்ந்து அருங்காட்சியகத்தில் தனது மெழுகுச் சிலையை திறந்து வைத்த சன்னிலியோன், அந்த சிலையுடன் நின்று போஸ் கொடுத்தார். அந்த புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது...!