புதுடெல்லி: குடும்ப வன்முறைச் சட்டத்தின் (Domestic Violence Act) கீழ் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது. புகுந்த வீட்டில் மருமகளின் உரிமைகளை உறுதி செய்வது நீதிமன்றத்தின் இந்த முடிவின் நோக்கமாகும்.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வரலாற்று சிறப்புமிக்க இந்த தீர்ப்பில், உச்சநீதிமன்றம், 'மருமகளுக்கு அவருடைய கணவன் வீட்டில், அதாவது புகுந்த வீட்டில் வாழ உரிமை உண்டு. மருமகளை கணவன் அல்லது குடும்ப உறுப்பினர்களால் பகிரப்பட்ட வீட்டிலிருந்து வெளியேற்ற முடியாது.’ என்று கூறியுள்ளது.


கணவன் வீட்டார் வீட்டை வாடகைக்கு எடுத்திருந்தாலும், அல்லது அந்த வீட்டில் பெண்ணின் கணவனுக்கு எந்த உரிமையும் இல்லாமல் இருந்தாலும், அப்படிப்பட்ட சூழலிலும் கூட யாரும் அந்த வீட்டிலிருந்து மருமகளை வெளியே அனுப்ப முடியாது என உச்ச நீதிமன்றம் (Supreme Court) தெளிவுபடுத்தியுள்ளது.


மூன்று நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் தீர்ப்பை அறிவித்தது


டெல்லியைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் அசோக் பூஷண், ஆர் சுபாஷ் ரெட்டி மற்றும் எம்.ஆர் ஷா ஆகியோரின் பெஞ்ச், இன்றும் நாட்டில் பல பெண்கள் குடும்ப வன்முறைக்கு ஆளாகி வருவதாகக் கூறினர். இந்த திசையில் வலுவான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். வீட்டு வன்முறைச் சட்டத்தின் கீழ், ஒவ்வொரு பெண்ணுக்கும் பகிரப்பட்ட வீட்டில் வாழ உரிமை உண்டு என்று நீதிபதிகள் மேலும் தெரிவித்தனர்.


ALSO READ: அதிர்ச்சி சம்பவம்.. மனைவியை 1 ½ வருட காலம் பாத்ரூமில் அடைத்து வைத்திருந்த கணவன்..!


பென்ணை வெளியேற்ற முடியாது


2005 ஆம் ஆண்டின், Hindu Succession Act 2005 சட்டத்தை விளக்கிய உச்சநீதிமன்றம், 'தனியாக இருக்கும் பெண்கள் தங்கள் வாழ்நாளில் வன்முறையையும் பாகுபாட்டையும் பலமுறை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. இந்த திசையில் 2005 சட்டம் பெண்களின் பாதுகாப்பிற்கான ஒரு மைல்கல்லாக நிரூபிக்கப்பட்டுள்ளது.


இங்கு குறிப்பிடப்பட்டுள்ள பிரிவு 2 இல் கொடுக்கப்பட்டுள்ள பொதுவான வீட்டின் வரையறை, கூட்டுக் குடும்பம் இருக்கும் வீட்டையோ, அல்லது, கணவனுக்கு உரிமையுள்ள வீட்டையோ மட்டும் குறிப்பதல்ல. கணவனுக்கு உரிமை இல்லாத வீட்டிலிருந்தும் அவரது மனைவியை வெளியேற்ற முடியாது.


நீதிமன்றம் தனது தீர்ப்பில் பெண்களுக்கு அவர்களின் உரிமைகளை வழங்க 2005 சட்டம் இயற்றப்பட்டது என்று கூறியது.


ALSO READ: Coimbatore Horror: பெண்ணே ஜாக்கிரதை, நண்பன் என்ற பெயரில் நரிகள் நடமாடும் உலகம் இது!!


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR