நாடு முழுவதும் உள்ள நதிகளை இணைக்கக்கோரிய பொதுநல மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காவிரி மற்றும் பல நாத் பிரச்சனைகள் எழுந்துள்ள நிலையில் இவை அனைத்தையும் தீக்கும் வகையில் அணைகளை மத்திய அரசு கட்டுப்பாட்டில் எடுத்து ஒரே வாரியமாக அமைத்து நிர்வகிக்க கோரி மதுரையை சேர்ந்த கே.கே. ரமேஷ் என்பவர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். 


இந்த மனுவானது தற்போது தலைமை நீதிபதியான தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வில் விசாரிக்கப்பட்டது. அப்போது, பதிலளித்த தலைமை நீதிபதிகலள், நாட்டில் எங்கோ நடக்கும் நதிநீர் பங்கீட்டு பிரச்சினைக்கு இது போன்ற உத்தரவை பிறப்பிக்க முடியாது என தெரிவித்தனர். இது போன்ற உத்தரவானது சாத்திய படாத ஒன்று எனவும் தெரிவித்தனர். 


நதிகள் இணைப்பது என்பது அவளவு சுலபம் இல்லை என்றும் இது போன்ற தீர்ப்பை நீதிமன்றம் வழங்க முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.இதை தொடர்ந்து, காவிரி மேலாண்மை வாரியம் சர்ச்சைக்கு உள்ளாகிய நிலையில் இந்த பொதுநல மனுவை தள்ளுபடி செய்துள்ளனர்.