உத்தரப் பிரதேசம் வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகே ஞானவாபி மசூதி அமைந்துள்ளது. 
1669 ஆம் ஆண்டில் கோயில் முற்றிலுமாக அழிக்கப்பட்டு அவுரங்கசீப்பின் உத்தரவின் பேரில் அங்கு ஒரு மசூதி கட்டப்பட்டதாக ஆவணங்கள் தெரிவிக்கின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


 ஞானவாபி மசூதி வளாகத்தின் வெளிப்புறச் சுவரில், சிங்கார கவுரி அம்மன் சிலை அமைந்து உள்ளது. இந்த அம்மன் சிலைக்குத் தினமும் பூஜை நடத்த அனுமதிக்கக் கோரி, வாரணாசி நீதிமன்றத்தில் கடந்த ஏப்ரல் மாதம், ஐந்து இந்து பெண்கள் வழக்கு தொடர்ந்த நிலையில், இந்த மனு மீதான விசாரணையில், ஞானவாபி மசூதியில் ஆய்வு நடத்தவும், வீடியோ பதிவு செய்யவும் வாரணாசி நீதிமன்றம் உத்தரவிட்டது.


கடந்த மூன்று நாட்களாக பலத்த பாதுகாப்பிற்கு இடையில், மேற்கொள்ளப்பட்ட மசூதி வளாகத்தில் உள்ள ஒரு குளத்தில் சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அந்த குளத்திற்குச் சீல் வைக்க வாரணாசி நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில், வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதி வளாகத்தை ஆய்வு செய்வதற்கு தடை கோரிய மனுவை உச்சநீதிமன்றம் இன்று (மே 17) விசாரிக்கிறது. நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான  நீதிமன்ற பிரிவு, அஞ்சுமன் இன்டெஜாமியா மசாஜித் கமிட்டியின் மனுவை விசாரிக்கும்.


இது தொடர்பாக நடந்த விசாரணையில், "புராணங்கள் ஞானவாபி கோவில் மற்றும் அங்கு வைக்கப்பட்டுள்ள 'ஜோதிர்லிங்கம்' பற்றி விரிவாகக் குறிப்பிடுகின்றன. இன்றைய ஞானவாபி மசூதி நமது வேதங்களில் குறிப்பிடப்பட்டுள்ள கோவில் வளாகத்தின் ஒரு பகுதியாக இருந்தது என்பதில் சந்தேகமில்லை" என்று ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோவில் அறக்கட்டளை தலைவர் நாகேந்திர பாண்டே கூறினார்.


வக்கீல் விஷ்ணு ஜெயின் கூறுகையில், "நேற்று தொழுகை செய்யும் நேரமான மதியம் 1 மணிக்குள் ஆதாரம் கிடைத்த நிலையில், ஆதாரங்களை பாதுகாப்பது முக்கியம் என்பதாலும்,  அவசர நிலை என்பதாலும் நீதிமன்றம் இடைக்கால பாதுகாப்பு அளித்தது. முஸ்லிம் தரப்பின் கோரிக்கை ஏற்க தக்கது அல்ல. அங்கே ஒரு சிவலிங்கம் உள்ளது, அது ஒரு கோவிலாக இருந்தது, அது அப்படியே இருக்கும்" என வாதிட்டார்.


மேலும் படிக்க | #AyodhyaKeBaadKashi: மோட்சத்திற்கு வழிகாட்டும் நகரில் 'சிவனுக்கே அ


1669 ஏப்ரல் 18ம் தேதி அவுரங்கசீப்பின் ஒரு ஆலோசகரால் வெளியிடப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆவணத்தில், அவுரங்கசீப், காஃபிர்கள் எனப்படும் இஸ்லாமியர் அல்லதவர்களின் கோயில்களையும் பள்ளிகளையும் இடிக்க வேண்டும் என்று ஒரு ஆணையை வெளியிட்டதாகவும், வேதம் மற்றும் சிலை வழிபாடு தொடர்பான அனைத்து வகையான நடவடிக்கைகளையும் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு  அறிவுறுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கிறது. 


இந்தியாவின் மீது இஸ்லாமியர்கள் படைஎடுப்பு தொடங்கியதும், காசி விஸ்வநாதர் மீதான  தாக்குதலும் தொடங்கியது. முதல் தாக்குதல் 11 ஆம் நூற்றாண்டில் குதுபுதீன் ஐபக் என்பவரால் நடத்தப்பட்டது. கோயிலின் சில பகுதி உடைக்கப்பட்ட நிலையில், தாக்குதல் நடந்தாலும் சிவபெருமானை வழிபாடு தொடர்ந்தது.  எனினும் 1669 ஆம் ஆண்டில் கோயில் முற்றிலுமாக அழிக்கப்பட்டு அவுரங்கசீப்பின் உத்தரவின் பேரில் அங்கு ஒரு மசூதி கட்டப்பட்டதாக ஆவணங்கள் தெரிவிக்கின்றன.


1780 ஆம் ஆண்டில், மால்வாவின் ராணி அகிலியாபாய் ஹோல்கர் கியான்வாபி வளாகத்திற்கு அடுத்ததாக, அருகில் ஒரு புதிய கோவிலைக் கட்டினார். புதிய வளாகம் தான் இப்போது காசி விஸ்வநாதர் கோயில் என்று அழைக்கப்படுகிறது. 


மேலும் படிக்க | காசி விஸ்வநாதர் ஆலயத்தின் மறைக்கப்பட்ட உண்மைகள்... வழக்கு விபரங்கள்..!!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR