மத்திய அரசின் பரிந்துரையை மறுத்தார் உச்சநீதிமன்ற நீதிபதி AK சிக்ரி!
காமென்வெல்த் தீர்ப்பாயத்தின் தலைவராக உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.கே. சிக்ரியை மத்திய அரசு பரிந்துரைத்த நிலையில், மத்திய அரசின் பரிந்துரையை சிக்ரி ஏற்க மறுத்துள்ளார்!
காமென்வெல்த் தீர்ப்பாயத்தின் தலைவராக உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.கே. சிக்ரியை மத்திய அரசு பரிந்துரைத்த நிலையில், மத்திய அரசின் பரிந்துரையை சிக்ரி ஏற்க மறுத்துள்ளார்!
உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகளில் ஒருவர் ஏ.கே.சிக்ரி வரும் மார்ச் மாதம் 6-ஆம் நாள் ஓய்வு பெறுகின்றார். இந்நிலையில் அவரை காமென்வெல்த் தீர்பாயத்தின் தலைவர் பதவிக்கு மத்திய அரசு பரிந்துரை செய்தது. ஆனால் இந்த பதவியை ஏற்க ஏ.கே. சிக்ரி மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
முன்னதாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், காமென்வெல்த் தீர்பாயத்தின் தலைவர் பதவிக்கு சிக்ரி பெயரை பரிந்துரை செய்ய மத்திய அரசு வாய்மொழியாக சம்மதம் கேட்ட நிலையில் அதற்கு சிக்ரி சம்மதம் தெரிவித்திருந்தார்.
இதற்கிடையில், CBI இயக்குநர் பதவியில் இருந்து அலோக் வர்மாவை மாற்றுவதற்காகச் சமீபத்தில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற உயர்நிலை தேர்வுக்குழுவில் இவரும் இடம் பெற்றார். அதில், வர்மாவை இடமாற்றம் செய்ய சிக்ரி. அதைத்தொடர்ந்து காமென்வெல்த் நடுவர் தீர்ப்பாயத் தலைவர் பதவிக்கு சிக்ரியை மத்திய அரசு பரிந்துரைத்துள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியானது பெரும் பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியது.
அலோக் வர்மா நீக்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பிரதமர் தலைமையிலான குழுவில் சிக்ரி இடம் பெற்றதற்கும், தீர்ப்பாயத்தின் தலைவராக மத்திய அரசு பரிந்துரைத்தற்கும் தொடர்புப் படுத்தி செய்திகள் வெளியானதால் இந்தப் பதவியை சிக்ரி ஏற்க மறுத்துள்ளதாக தெரிகிறது.
குறிப்பு: காமென்வெல்த் தீர்ப்பாயத் தலைவர் பதவி என்பது ஊதியம் இல்லாத பதவியாகும், ஆண்டுக்கு 2 அல்லது 3 முறை மட்டும் அலுவலகம் செல்ல வேண்டி இருக்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.