14 November 2019, 10:52 AM


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உச்சநீதிமன்றம் ஏற்கனவே வழங்கிய தீர்ப்பின்படி தற்போது சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் வழிபட தடை இல்லை



14 November 2019, 10:50 AM


சபரிமலை தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்த மறு ஆய்வு மனுக்களை நீதிபதி நாரிமன் தள்ளுபடி செய்தார்.



பெண்கள் செல்ல கட்டுப்பாடு விதிக்கப்படுவது சபரிமலையில் மட்டுமல்ல, வேறு கோயில்களிலும், மசூதிகளிலும் உள்ளது என தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தெரிவித்துள்ளார்..!


கேரள மாநிலத்தில் உள்ள சபரி மலை ஐய்யப்பன் கோயிலில் 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்களுக்கு அனுமதி கிடையாது என்பது, காலம் காலமாக கடைபிடிக்கப்பட்ட சம்பிரதாயம். இந்நிலையில், அனைத்து பெண்களையும் கோயிலுக்குள் அனுமதிக்க வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு செப்டம்பர் 28 ஆம் தேதி, வயது வரம்பின்றி அனைத்து பெண்களும் சபரிமலை ஜயப்பன் கோவிலுக்கு செல்லலாம் என்ற பரபரப்பான தீர்ப்பை வழங்கியது. இந்த தீர்ப்பு குறிப்பிட்ட தரப்பினரிடையே வரவேற்பை பெற்றிருந்தாலும் பெருவாரியான மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் குதித்தனர். 


மேலும் இந்த தீர்ப்பை எதிர்த்து ஐயப்ப பக்தர்கள் சார்பில் 65 சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று  5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது,  தனிப்பட்ட நம்பிக்கை ஒருவரின் உரிமையை பறிக்கக்கூடாது என்றும், சபரிமலை மட்டுமின்றி வேறு கோயில்கள், மசூதிகளிலும் பெண்கள் செல்ல கட்டுப்பாடு உள்ளதாகவும், அனைத்து மதத்தினரும் அவர்களது மத நம்பிக்கையை கடைபிடிக்க உரிமை உள்ளது என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். மேலும், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் உட்பட 3 நீதிபதிகள் வழக்கை பெரிய அமர்வுக்கு மாற்ற பரிந்துரைத்ததையடுத்து, அனைத்து பெண்களையும் அனுமதிக்க எதிர்ப்பு தெரிவிக்கும் வழக்கை 7பேர் கொண்ட அமர்வுக்கு மாற்ற அரசியல் சாசன அமர்வு உத்தரவிட்டது. 


மேலும், சீராய்வு மனுக்கள் நிலுவையில் இருக்கும் எனவும், அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் முந்தைய தீர்ப்புக்கு தடையில்லை, தொடரும் எனவும் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தெரிவித்துள்ளது. 


மேலும், சபரிமலை வழக்கு 5 நீதிபதிகள் பெஞ்ச்-ல் இருந்து 7 நீதிபதிகள் பெஞ்சுக்கு மாற்றம் செய்துள்ளனர்.  உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகளில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் கன்வில்கர், இந்து மல்ஹோத்ரா ஆகியோர் இந்த வழக்கை 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்ற பரிந்துரை செய்தனர்