புதுடெல்லி: பெரும் சிக்கலில் சிக்கித் தவித்து வரும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் உச்ச நீதிமன்றத்தை நாடினார்கள். ஆனால் அங்கு அவர்களுக்கு நிவாரணம் கிடைக்கவில்லை. தொலைத்தொடர்பு நிறுவனங்களின் மறுஆய்வு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. உங்கள் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று நாங்கள் நினைக்கவில்லை என்று நீதிமன்றம் கூறியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான உச்சநீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் (நீதிபதிகள் அப்துல், நசீர் மற்றும் எம்.ஆர். ஷா) பாரதி ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா உள்ளிட்ட தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தாக்கல் செய்த மனுக்களை இன்று (வியாழக்கிழமை) தள்ளுபடி செய்தது. தொலைத் தொடர்புத் துறையிலிருந்து பெறப்பட்ட அறிவிப்பின் அடிப்படையில் ஏஜிஆர் (Adjusted Gross Revenue)  ரூ. 1.47 லட்சம் கோடி ஆகும். அது சரிசெய்யப்பட்ட சுமார் 92,000 கோடியை தொலைத் தொடர்பு நிறுவனங்கள் அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டியிருக்கும். 


ஏற்கனவே சரிசெய்யப்பட்ட மொத்த வருவாயை (AGR) செலுத்த வேண்டும் என்று கூறி உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு அக்டோபர் 24 ஆம் தேதி தீர்ப்பு அளித்திருந்தது. அந்த தீர்ப்பை எதிர்த்து தொலைத் தொடர்பு நிறுவனங்கள் உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனுவை தாக்கல் செய்தனர். இந்த மனுவை உச்ச நீதிமன்றம் இன்று நிராகரித்தது.


இதனால் ஏர்டெல் 23 ஆயிரம் கோடி, வோடபோன்-ஐடியா 27 ஆயிரம் கோடி மற்றும் ஆர்.காம் 16.5 ஆயிரம் கோடி ரூபாய் செலுத்தவேண்டியிருக்கும்.


உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.