உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உட்பட மொத்தம் 25 நீதிபதிகள் கேரளாவுக்கு நிதியுதவி
கேரளாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நீதிபதிகள் நிதியுதவி அளிக்க முடிவு செய்துள்ளனர்.
கேரளாவில் மே மாதம் 29 ஆம் தேதி முதல் பெய்து வரும் தென்மேற்கு பருவ மழையால் ஏற்ப்பட்ட வெள்ளத்தால் இதுவரை கிட்டத்தட்ட லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதில் பல பேர் வீடுகளை இழந்துள்ளனர். பலியானவர்களின் எண்ணிக்கை 361 ஆக உயர்ந்துள்ளது. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கேரளா மாநிலம் முழுவதும் வெள்ளத்தால் சீரழிந்தது.
இதனால் அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் நிதியுதவி அளிக்குமாறு அனைவரிடம் கோரிக்கை வைத்தார். இதயனைடுத்து கேரளாவுக்கு உலக முழுவதிலும் இருந்து நிதியுதவிகள் அளிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் மற்றும் பல மாநிலங்களில் இருந்தும் கேரளாவுக்கு நிதியுதவி அளிக்கப்பட்டு வருகிறது. இதில் அரசாங்கம் மட்டுமில்லாமல, தனியார் மற்றும் தனி நபர் என தங்களால் முடிந்த நிதி, உணவு பொருட்கள், ஆடைகள் என அளித்து வருகின்றனர்.
கேரள மாநிலத்தில் மழையால் ஏற்ப்பட்டுள்ள வெள்ள சேதத்தை கருத்தில் கொண்டு கேரளா மாநிலத்தை தீவிர இயற்கை பேரிடராக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உட்பட மொத்தம் 25 நீதிபதிகள், வெள்ள நிவாரண தொகையாக, கேரள முதல் மந்திரி நிவாரண நிதியில் ரூ. 25 ஆயிரம் நன்கொடை அளிப்பார்கள் என சுற்றறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது.
முன்னதாக, கேரளாவில் ஏற்பட்ட பேரழிவை சமாளிக்க கேரள முதல் மந்திரி நிவாரண நிதிக்கு கே.கே. வேணுகோபால் ஒரு கோடி ரூபாய் வழங்கினார். இவரது மகனும் மூத்த வழக்கறிஞரான கிருஷ்ண வெங்கக்பால் ரூ .15 லட்சம் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.