அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கு இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வில் விசாரணைக்கு வருகிறது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாபர் மசூதி இருந்த இடம், ராமர் பிறந்த இடம் என்ற சர்ச்சை கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இந்த சர்ச்சை காரணமாக பாபர் மசூதி இடிக்கப்பட்ட நிலையில், 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான வழக்கில் 2010-ம் ஆண்டு அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. நிலத்தை மூன்றாக பிரித்து ராமர் கோவில், இஸ்லாமிய வக்ஃபு வாரியம், நிர்மோகி அகரா இந்து அமைப்பு ஆகியவற்றுக்கு பிரித்து வழங்க உத்தரவிடப்பட்டது.


இந்த தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட பல்வேறு வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் இந்த வழக்குகளை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு இன்று முதல் விசாரிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான நீதிபதிகள் குழுவில் நீதிபதி எஸ்.ஏ. பாப்டே, என்.வி.ரமணா, UU. லலித் மற்றும் டி.ஆர்.சந்திரச்சாத் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்த 5 நீதியரசர்கள் கொண்டு அமர்வு ஜன்ம பூமி தொடர்பான வழக்கின் விசாரணையை இன்று முதல் துவங்குகிறது.


புதிதாக அமைக்கப்பட்டுள்ள இந்த 5 நீதிபதிகள் அமர்வில், தற்போதைய தலைமை நீதிபதி மட்டும் அல்லாமல், எதிர்கால தலைமை நீதியரசர்கள் வரிசையில் இருக்கம் நீதிபதிகளையும் கொண்டுள்ளது.


சமீபத்தில் ANI செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த பிரமர் மோடி அவர்கள், உச்சநீதிமன்ற தீர்ப்பிர்க்கு பின்னரே ராமர் கோவில் கட்டுவது தொடர்பான சட்டபூர்வ முடிவுகள் எடுகப்படும், எடுக்கப்படும் முடிவுகள் அனைத்தும் சட்டரீதியானதாகவே இருக்கும் என தெரிவித்து இருந்தார். இந்நிலையில் தற்போது இவ்வழக்கு தொடர்பான விசாரணை தொடங்கப்படவுள்ளது நாட்டு மக்கள் கவனத்தை ஈர்த்துள்ளது.