ஹிஜாப் தடைக்கு எதிரான வழக்கு...ஹோலி விடுமுறைக்குப் பின் விசாரணை
கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய தடை விதித்தது செல்லும் என்ற கர்நாடக உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனு ஹோலி விடுமுறைக்கு பின் விசாரிக்கப்படும் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள கல்வி நிலையத்தில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வந்ததற்கு கல்லூரி நிர்வாகம் தடை விதித்தது. இதை எதிர்த்து மாணவிகள் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கை விசாரித்த தனி நீதிபதி கிருஷ்ணா தீட்ஷித் இந்த வழக்கை 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்க பரிந்துரை செய்தார். இதன்படி தலைமை நீதிபதி ரிது ராஜ் அவஷ்தி, நீதிபதிகள் ஜே.எம்.காஷி, கிருஷ்ணா தீட்ஷித் ஆகியோர் அடங்கிய அமர்வு இவ்வழக்கை விசாரித்தது. நாடு முழுவதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிவது இஸ்லாத்தின் அத்தியாவசியமான நடைமுறை இல்லை எனவும், கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடை செல்லும் எனவும் தீர்ப்பளித்த நீதிபதிகள், மாணவிகளின் மனுக்களை தள்ளுபடி செய்தனர்.
மேலும் படிக்க | கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதை எதிர்த்த மனுக்கள் தள்ளுபடி: கர்நாடக உயர்நீதிமன்றம்
கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மனுக்களை தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு விசாரித்தது. மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சஞ்சய் ஹெக்டே, விரைவில் தேர்வுகள் நடைபெறவுள்ளதால் இவ்வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தார். ஏராளமான இஸ்லாமிய பெண்கள் தேர்வு எழுத உள்ளதால் இவ்வழக்கை விரைந்து விசாரிப்பது அவசியம் எனவும் மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, ஹோலி விடுமுறைக்கு பின் இவ்வழக்கை விசாரிப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க | ஹிஜாப் தீர்ப்பு; இசுலாமியர்களுக்கு இழைக்கப்பட்ட பெரும் அநீதி: சீமான்
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR