ஜம்மு மற்றும் காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிராக போராடும் போது லான்ஸ் நாயக் சந்தீப் சிங் வீரமரணம் அடைந்தார். இவர் பாகிஸ்தான் எல்லையில் துல்லிய தாக்குதலில் (சர்ஜிகல் ஸ்டிரைக்) ஈடுபட்ட துணிச்சலான வீரர்களில் ஒருவர் ஆவார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பஞ்சாபில் குர்தாஸ்பூரில் வாழ்ந்து வந்த சந்தீப் சிங், 4 பர்மா கமாண்டோ அணியுடன் தங்தார் துறைமுகத்தில் உள்ள கங்காதர் நாரில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக தகவல் வந்ததை அடுத்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இந்த தேடுதல் வேட்டையின் போது சில சந்தேகத்திற்குரிய நபர்களை அவர்கள் கண்டனர். அவர்களை நோக்கி படை வீரர்கள் முன்னோக்கி சென்று கண்டுபிடிக்க முயன்றனர். பயங்கரவாதிகள் இருப்பதை உறுதிப்படுத்திக் கொண்டார்.


 



பின்னர் பயங்கரவாதி மற்றும் படை வீரர்களுக்கு இடையே துப்பாக்கி சண்டை நடைபெற்றது. இந்த சண்டையில் மூன்று பயங்கரவாதிகள் சந்தீப் சிங் சுட்டுக்கொன்றார். தொடர்ந்து நடைபெற்ற மோதலில் சந்தீப் சிங் தலையில் குண்டு துளைத்தது. ஆனால் தொடர்ந்து அவர் சண்டையிட்டுக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் பலத்த காயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் லான்ஸ் நாயக் சிங் வீரமரணம் அடைந்தார். பயங்கரவாதிகளிடமிருந்து ஏராளமான ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன என ஒரு மூத்த இராணுவ அதிகாரி கூறினார்.


 



வீரமரணம் அடைந்த லான்ஸ் நாயக் சிங் குடும்பத்தில் மனைவி மற்றும் 5 வயது மகன் உள்ளார். இன்று (செவ்வாய்) பிற்பகல் குர்தாஸ்பூரில் அவர் நல்லடக்கம் செய்யப்படுகிறார்.