ராஞ்சி: ஜார்க்கண்டில் மதுபானங்கள் ஹோம் டெலிவரி சேவையைத் தொடங்க அனுமதி பெற்றுள்ளதாக ஆன்லைன் உணவு விநியோக தளங்களான ஸ்விக்கி (Swiggy) மற்றும் ஜொமாடோ (Zomato) வியாழக்கிழமை தெரிவித்துள்ளன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜார்க்கண்டில் புதன்கிழமை மதுபானக் கடைகள் மீண்டும் திறக்கப்பட்டபோது, ​​மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தபோதும், மதுபான கடைகளுக்கு வெளியே வரிசையில் கூட்டமாக நிற்பதைக் காண முடிந்தது. மேலும் கூட்டத்தை கட்டுப்படுத்த மாநில அரசால் மதுவுக்கு கூடுதலாக 25 சதவீதம் மதிப்பு கூட்டப்பட்ட வரி விதிக்கப்பட்டிருந்தாலும், கூட்டம் குறையவில்லை  மற்றும் சமூக இடைவெளியை யாரும் பின்பற்றவில்லை. 


மேலும் படிக்க: ஆன்லைனில் மது விற்பனையை தொடங்கவில்லை.. LINK போலியானது: டாஸ்மாக் நிர்வாகம்


ஆனால் ராஞ்சியில் வசிப்பவர்கள் இப்போது தங்கள் ஸ்விக்கி (Swiggy) பயன்பாட்டைப் புதுப்பிப்பதன் மூலம் "ஒயின் ஷாப்ஸ்" என்ற வரிசையில் வீட்டுக்கு மதுபானம் டெலிவரி செய்ய ஆர்டர் கொடுக்கலாம் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த சேவை ஒரு வாரத்திற்குள் மாநிலத்தின் பிற முக்கிய நகரங்களில் மேற்கொள்ளப்படும் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.


ஜொமாடோ (Zomato)செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், அதன் ஆல்கஹால் ஹோம் டெலிவரி சேவை அடுத்த இரண்டு நாட்களில் ராஞ்சி மற்றும் ஜார்கண்டில் உள்ள ஏழு நகரங்களில் தொடங்க உள்ளோம் என்றார்.


மேலும் படிக்க: 7 வண்ண டோக்கன்கள் அடிப்படையில் இனி மதுபானம் விற்பனை; அசத்தும் TASMAC!


"உரிய அனுமதிகள் மற்றும் உரிமங்கள் உள்ள நிலையில், நாங்கள் ஜார்க்கண்டில் வீட்டுக்கு மதுபானம் வழங்கத் தொடங்குகிறோம். வீட்டு விநியோக அடிப்படையில், ஆல்கஹால் நுகர்வுக்கு உதவுவதோடு, பாதுகாப்பான மற்றும் சமூக தூரத்தை ஊக்குவிக்கும் ஒரு பொறுப்பான விருப்பத்தையும் வழங்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்" என ஜொமாடோ (Zomato) செய்தித் தொடர்பாளர் கூறினார்.


இந்த சேவைக்கு ஜார்கண்ட் அரசாங்கத்திடம் தேவையான ஒப்புதல்களைப் பெற்றுள்ளதாகவும் ஸ்விக்கி (Swiggy) நிறுவனம் கூறியது. இதேபோன்ற சேவையை வழங்குவதற்காக பல மாநில அரசாங்கங்களுடன் பேச்சு வாரத்தை மேம்பட்ட கட்டத்தில் உள்ளது என்று நிறுவனம் வெளிப்படுத்தியது.


மேலும் படிக்க: நாடு முழுவதும் மதுக்கடைகள் திறக்கும் போது, தமிழகத்தில் திறக்காமல் இருக்க முடியாது


"தொற்றுநோயின் தொடக்கத்திலிருந்து, வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்வதிலும், அரசாங்கங்களுக்கு முடிந்தவரை உதவி செய்வதிலும் ஸ்விக்கி ஊழியர்கள் அயராது உழைத்துள்ளனர்" என்று ஸ்விக்கியின் தயாரிப்புகளுக்கான துணைத் தலைவர் அனுஜ் ரதி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


"மதுபானத்தை பாதுகாப்பான மற்றும் பொறுப்பான முறையில் வீட்டுக்கு வழங்குவதன் மூலம், சில்லறை விற்பனை நிலையங்களுக்கு கூடுதல் வணிகத்தை உருவாக்க முடியும், அதே நேரத்தில் கூட்ட நெரிசலின் சிக்கலைத் தீர்க்கலாம், இதனால் சமூக தூரத்தை ஊக்குவிக்க முடியும்."


ஆல்கஹால் பாதுகாப்பாக வழங்கப்படுவதை உறுதி செய்வதற்கும், சட்டங்களுக்கு உட்பட்டு கட்டாய வயது சரிபார்ப்பு போன்ற நடவடிக்கைகளை ஸ்விக்கி  அறிமுகப்படுத்தி உள்ளது என்றார்.