2 குழந்தைகளுக்கு மேல் பெற்றால் அவர்களுக்கு தேர்தலில் வாக்களிக்கும் உரிமையால் ரத்து செய்யுங்கள் என யோகா குரு ராம்தேவ் கூறுகிறார்.....


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியாவில் வளர்ந்து வரும் மக்கள் தொகையை கட்டுப்படுத்த மத்திய அரசுக்கு பிரபல பதஞ்சலி நிறுவன தலைவர், யோகா குரு ராம்தேவ் புதன்கிழமை இரண்டு குழந்தைகளுக்கும் அதிகமான குழந்தை பெற்றால் அவர்களுக்கு தேர்தலில் வாக்களிக்கும் உரிமையை ரத்து செய்யலாம் என்ற புதிய ஆலோசனையை வழங்கியுள்ளார். 


மேலும், "இரண்டு குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்கள், தங்கள் வாக்களிக்கும் உரிமைகளை எடுத்துக் கொள்ளதுடன், தேர்தலில் போட்டியிட அனுமதிக்கப்படக்கூடாது" என்று பதஞ்சலி நிறுவனர் கூறினார்.


இது குறித்து அவர் மேலும் பேசுகையில், நாட்டின் மக்கள் தொகையை கட்டுப்படுத்த வேண்டுமானால், இந்துவோ அல்லது முஸ்லிமோ 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றுக் கொள்ளக் கூடாது. அவ்வாறு 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றுக் கொள்பவர்களின் ஓட்டுரிமை, அரசு வேலை, அரசு மருத்துவ வசதிகள் ஆகியவற்றை பறிக்க வேண்டும். அத்தகையவர்களை தேர்தலில் போட்டியிட அனுமதிக்கக் கூடாது. அவர்கள் அரசு பள்ளிகள், மருத்துவமனைகள் பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது. அவர்களுக்கு அரசு வேலையும் தரக்கூடாது. அப்போது தான் மக்கள்தொகையை கட்டுப்படுத்த முடியும். அப்படி செய்தால் மக்கள்தொகை தானாக குறைந்து விடும் என தெரிவித்துள்ளார்.



இது போன்றதொரு கருத்தை ராம்தேவ் கூறுவது இது முதல் முறையல்ல. கடந்த ஆண்டும் இதே போன்தொரு கருத்தை அவர் கூறி ள்ளார். மேலும் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்தால் தான் தன்னை போல் புகழ்பெற முடியும் எனவும், சாதனைகள் புரிய முடியும் எனவும் தெரிவித்துள்து குறிப்பிடத்தக்கது.