டிஜிட்டல் முறையில் பணப்பரிவர்த்தனை- மோடி
கள்ள பணம், கருப்பு பணம் ஒழிப்பிக்கு இந்திய மக்கள் டிஜிட்டல் முறையில் பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
புதுடெல்லி: கள்ள பணம், கருப்பு பணம் ஒழிப்பிக்கு இந்திய மக்கள் டிஜிட்டல் முறையில் பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
பணப் புழக்கத்தைத் தவிர்த்துவிட்டு, டிஜிட்டல் முறையில் பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் நரேந்திர மோடி இன்றும் நாட்டு மக்களை வலியுறுத்தியுள்ளதாக ஆனந்த் குமார் கூறினார்.
அதாவது, நாட்டு மக்கள் அனைவரும் தங்களது வாழ்க்கை முறையை டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு ஏற்ற வகையில் அமைத்துக் கொள்ளுமாறு வலியுறுத்தியுதாகக் கூறினார். இதன் மூலம், ஊழல் மற்றும் கருப்புப் பணம் ஒழியும் என்று தெரிவித்ததாகவும் கூறியுள்ளார்.
அணைத்து பாஜக எம்.பி.,களும் பொதுமக்களுக்கு பணப் புழக்கத்தைத் தவிர்த்துவிட்டு, டிஜிட்டல் முறையில் பணப் பரிவர்த்தனை செய்வது மற்றும் அடங நன்மைகள் என்ன வென்று எடுத்து கூற வேண்டும் என்று முன்னதாக பிரதமர் மோடி கூறியிருந்தார்.