விருப்பப்பட்டால் ஊதியமின்றி விடுமுறை எடுத்துக் கொள்ளுமாறு போயிங் 737 ரக விமானங்களை இயக்கும் விமானிகளை ஜெட் ஏர்வேஸ் அறிவுரை!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியாவின் முன்னணி நிறுவனமான ஜெட் ஏர்வேஸில் 23 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். சில ஆண்டுகளாக ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் நஷ்டத்தில் இயங்கி வருகிறது. நிறுவனம் வாங்கிய கடன்களையும் அடைக்க முடியவில்லை. சுமார் 7 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கடன் உள்ளது. அந்த கடனையும் நிறுவனத்தால் அடைக்க முடியவில்லை.


கடும் நிதி நெருக்கடியால் ஊழியர்களுக்கு பல மாதமாக சம்பளமும் வழங்கவில்லை. மேலும் பல விமானங்களை இயக்க முடியாமல் நிறுத்தப்பட்டு உள்ளன. இதற்கிடையே ஜெட் ஏர்வேஸ் நிறுவன விமானிகள் தங்கள் சம்பள பாக்கியை உடனே வழங்காவிட்டால் வருகிற ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் விமானங்களை இயக்காமல் ஸ்டிரைக்கில் ஈடுபடபோவதாக தெரிவித்திருந்தனர்.


இதையடுத்து, விமானிகள் மற்றும் விமான பராமரிப்பு பொறியாளர்களுக்கு கொடுக்க வேண்டிய முழு சம்பள பாக்கியையும் தற்போது தர இயலாது என்றும், டிசம்பர் மாத சம்பளத்தை மட்டும் தற்போது வழங்குகிறோம் என்று அந்நிறுவன தலைவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில், விருப்பப்பட்டால் ஊதியமின்றி விடுமுறை எடுத்துக் கொள்ளுமாறு போயிங் 737 ரக விமானங்களை இயக்கும் விமானிகளை ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.


போயிங் 737 ரக விமானங்களை இயக்கும் விமானிகள் விருப்பப்பட்டால் வரும் செப்டம்பர் மாதம் வரை ஊதியமின்றி விடுமுறை எடுத்துக் கொள்ளலாம் என்று ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஜெட் எர்வேஸ் நிர்வாகத்தை, தற்போது கடன் வழங்கிய எஸ்பிஐ தலைமையிலான வங்கிகள் கையில் எடுத்துள்ளன. அந்த நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்வது தொடர்பாக பல நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. தற்போது 35 விமானங்கள் இயக்கப்படும் நிலையில், இம்மாத இறுதிக்குள் 75 விமானங்கள் இயக்கப்படும் என்று அந்த நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.


தற்போது 35 விமானங்கள் இயக்கப்படும் நிலையில், இம்மாத இறுதிக்குள் 75 விமானங்கள் இயக்கப்படும் என்று அந்த நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.