கடந்த 2 வருடமாக 260 ஏக்கர் பூங்காவை கிட்டத்தட்ட 3000க்கும் மேற்பட்டோர் ஆக்கிரமித்திருந்தனர். ஆக்கிரமித்தவர்களை வெளியேற்ற உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள அலகாபாத் கோர்ட்டு உத்தரவின் பெயரில் போலீஸ் நடவடிக்கை எடுத்தது. கலவரம் வெடித்தது.  அங்கு தங்கியிருந்தவர்கள் போலீசாரை தாக்கினர். இந்த மோதலில் 2 போலீசார் மற்றும் 12 ஆக்கிரமிப்பாளர்கள் உயிரிழந்து உள்ளனர்.


இதனையடுத்து மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் உயிரிழந்த 2 போலீசார் குடும்பத்திற்கு ரூ. 20 லட்சம் உதவித்தொகை வழங்கப்படும் என்று அறிவித்துள்ள நிலையில் இறந்த எஸ்.பி. முகுல் திவேதியின் தாயார் அவர்கள் நியூஸ் ஏஜென்சி ஏ.என்.ஐ-விடம் " முதல்வர் அகிலேஷ் யாதவ் அவர்களே எனக்கு பணம் வேண்டாம். என் மகன் தான் வேணும்., நான் 2௦ லட்சம் தருகிறேன் என் மகனை திரும்ப தரமுடியாம?" என கண்ணீருடன் கேட்டுள்ளார்.