தமிழ் சினிமா ரசிகர்கள் வெட்டுக்கிளி தாக்குதலை சூரியாவின் 'கப்பன்' காட்சிகளுடன் ஒப்பிடுகிறார்கள்... 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியாவில் பயிர்களை வெட்டுக் கிளி தாக்கி வரும் நிலையில், 2019 ஆம் ஆண்டில் வெளியான கே.வி. ஆனந்தின் காப்பான், படத்தை ரசிகர்கள் நினைவு கூறுகிறார்கள். படத்தில், ஒரு வக்கிர மனம் கொண்ட தொழிலதிபர் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிக்க வெட்டுக்கிளிகளை ஏவி விடுகிறார். விவசாயிகளை நிலங்களை கையகப்படுத்த இந்த திட்டம் தீட்டுகிறார். இந்த கதாபாத்திரத்தில் போமன் இரானி நடித்தார்.


இப்படத்தில் சூரியா கதாநாயகனாக நடித்தார். மோகன்லால், ஆர்யா மற்றும் சயீஷா போன்ற பல நட்சத்திரங்களும் நடித்தனர். படத்தில் வெட்டுக்கிளிகள் நுழைவதற்கு ஒரு கொடூரமான சதி காரணம் எப்ன கூறப்பட்ட போதிலும், நிஜ வாழ்க்கையில், காலநிலை மாற்றம், குளிர்கால புயல்கள் மற்றும் பருவமழைக்கு முந்தைய மழைப்பொழிவு ஆகியவை இது திரளாக வந்து தாக்குவதற்கு காரணம். தற்போது, இந்தியாவில் வெட்டுக்கிளிகள் ராஜஸ்தான், குஜராத், மத்தியப் பிரதேசம், பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய இடங்களில் பயிர்களை தாக்கியுள்ளன.


இதைத் தொடர்ந்து, வெட்டுக்கிளி திரளாக வந்து தாக்குவதை கப்பான் எவ்வாறு "கணித்துள்ளார்" என்பது பற்றி சமூக ஊடகங்களில் பல மீம்ஸ்கள் வந்துள்ளன. 7ஆம் அறிவு முதல் உறியடி 2 வரையில் தமிழ் சினிமாவில்  காணப்பட்ட கணிப்புகளை இந்த மீம்ஸ் சுட்டிக்காட்டுகின்றன.


இருப்பினும், வெட்டுக்கிளி திரள் இந்தியாவுக்கு புதியதல்ல, 1997 முதல் நாடு இதன் படையெடுப்புகளைக் கண்டது. இந்தியா டுடேக்கு அளித்த பேட்டியில், கே.வி. ஆனந்த் பல வருடங்களுக்கு முன்பு ஒரு படத்திற்காக மடகாஸ்கருக்குச் சென்றபோது வெட்டுக்கிளி திரள் ஒன்றைக் கண்டபின் தனக்கு இந்த யோசனை கிடைத்ததை வெளிப்படுத்தினார். தற்செயலாக, அந்த படத்திலும் சூரியா நடித்தார்!


"சூரியாவின் மாற்றான் தயாரிப்பு தொடர்பான பணிக்காக நான் ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு மடகாஸ்கருக்குச் சென்றேன். நான் படத்துக்கான லொகேஷனை தேடிக் இருந்தேன். எனது குழுவுடன் ஒரு காரில் பயணித்தபோது, ஆயிரக்கணக்கான வெட்டுக்கிளிகள் எங்களை நெருங்குவதைக் கண்டேன். எங்களுக்கு வாகனம் ஓட்டுவது கடினமாகிவிட்டது, அதை தவிர்க்க நாங்கள் மணிக்கணக்கில் வாகனத்தை நிறுத்த வேண்டியிருந்தது. அப்போதுதான் நான் இது பற்றி அங்குள்ள ஒரு உள்ளூர் குடியிருப்பாளரிடம் விசாரித்து நிறைய விவரங்களைச் சேகரித்தேன். பின்னர், இந்த யோசனையை எனது காப்பன் திரைப்படத்தில் சேர்த்தேன், "என்று அவர் கூறினார்.




அவர் மேலும் கூறுகையில், "கப்பானில் பணிபுரியும் முன்பு நான் இந்த விஷயத்தில் விரிவான ஆராய்ச்சி செய்தேன். வெட்டுக்கிளி படையெடுப்பு குறித்து பைபிளிலும் குர்ஆனிலும் நிறைய குறிப்புகள் உள்ளன. உண்மையில், வெட்டுக்கிளிகள் இடம்பெயர்வு மற்றும் நாகரிகத்தின் பிற மாற்றங்களில் முக்கிய பங்கு வகித்தன. மிக மோசமான விஷயம் என்னவென்றால், இந்த பூச்சிகள் ஏராளமான எலிகளை ஈர்க்கும் மற்றும் மறைமுகமாக நோயை பரப்பக்கூடும். 1903 முதல் 1906 வரையிலான காலகட்டத்தில் மும்பை வெட்டுக்கிளி தாக்குதலுக்கு பலியானது. வரலாறு எப்போதும் திரும்பத் திரும்ப வரும். நாம் வேகமாக செயல்பட்டு அதைக் கட்டுப்படுத்த வேண்டும். " என்றார்.




வெட்டுக்கிளிகள் மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கவில்லை என்றாலும், அவை மிக விரைவாக பயிர்களை சாப்பிடுகின்றன. அவை விரைவாக இனப்பெருக்கம் செய்வதையும் கருத்தில் கொண்டு, கடுமையான சேதத்தை ஏற்படுத்துவதற்கு முன்பு கட்டுப்படுத்த வேண்டும்.


காப்பானில், பிரதமரைக் காக்கும் சிறப்பு பாதுகாப்பு குழு (எஸ்.பி.ஜி) அதிகாரியாக சூர்யா நடித்தார். இதில் மோகன்லால் பிரதமராக நடித்தார். பிரதமரின் மகனாக ஆர்யா நடித்தார், சயீஷா பிரதமரின் செயலாளராக வந்தார்.


- (மொழியாக்கம்) சரிதா சேகர்.