புதுடெல்லி: தேசிய சாலை பாதுகாப்பு கவுன்சில் மற்றும் போக்குவரத்து மேம்பாட்டு கவுன்சில் கூட்டத்தில் கலந்துக்கொண்டு பேசிய மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி மிகவும் ஆக்ரோஷமாக இருந்தார். கட்கரியின் இந்த கோபத்திற்கு காரணம் நாட்டில் ஏற்படும் சாலை விபத்து தான். அதிக சாலை விபத்து ஏற்படும் பட்டியலில் நாம் முதலிடத்தில் உள்ளோம் என்று கட்கரி கூறினார். ஒவ்வொரு ஆண்டும் ஒன்றரை மில்லியன் மக்கள் ஒரு விபத்தில் இறந்து கொண்டிருக்கிறார்கள். இதற்கு ஏதாவது செய்ய வேண்டும். பயங்கரவாதம் அல்லது மாவோயிஸ்ட் போன்ற சம்பவங்களில் இறக்காதவர்களை விட நாட்டில் சாலை விபத்துக்களில் அதிகமானோர் இறந்து கொண்டிருக்கிறார்கள் எனக் கடுமையாக பேசினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எச்சரித்த நிதின் கட்கரி:
சாலை திட்டங்களை தயாரிப்பதில் குழப்பம் விளைவிக்கும் சாலை அதிகாரிகள் மிகப்பெரிய குற்றவாளிகள். அவர்கள் குறைபாடுகளுடன் கூடிய திட்ட அறிக்கையை உருவாக்குகிறார்கள். அவர்கள் கடுமையான வழியில் தண்டிக்கப்பட வேண்டும். இதுபோன்றவர்களை சுத்தப்படுத்த வேண்டும், ஏனென்றால் அமைப்பை மேம்படுத்துவது மிகவும் முக்கியம்.


கடந்த 5 ஆண்டுகளில் சாலை விபத்து தடுப்பு குறையவில்லை என்று நிதின் கட்கரி ஒப்புக் கொண்டார். கடந்த ஐந்து ஆண்டுகளில் 0.46% சாலை விபத்துக்கள் அதிகரித்துள்ளதாக எண்ணிக்கை கூறுகிறது.


சாலை விபத்துக்களைத் தடுக்க, மோட்டார் வாகனச் சட்டத்தையும் மத்திய அரசாங்கம் திருத்தியது. அதில் விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் அதிகரிக்கப்பட்டது. ஆனால் பெரும்பாலான மாநிலங்களில் அது அமல் செய்யப்படவில்லை. விரைவில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்.


அனைத்து மாநிலங்களுக்கு தமிழ்நாடு முன்னுதாரணம்:
சாலை விபத்துக்கள் மற்றும் இறப்புகளைக் குறைப்பதில் வெற்றி பெற்ற ஒரே மாநிலம் தமிழகம் என்று நிதின் கட்கரி கூறினார். 2017 ஆம் ஆண்டில், தமிழகத்தில் 16,157 பேர் இறந்தனர். 2018 ஆம் ஆண்டில் 12,216 பேர் இறந்துள்ளனர். சுமார் 4000 பேரின் மரணம் தவிர்க்கப்பட்டு உள்ளது. நாட்டில் உள்ள மற்ற மாநிலங்களுக்கு தமிழ்நாடு முன்னுதாரணமாக உள்ளது. அதை பின்பற்ற பரிந்துரைக்கப்படுகிறது எனக் கூறினார்.


 



உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.