தன்மய் பட்டின் `சச்சின் வெர்சஸ் லதா` சிவில் வார் காமெடி வீடியோவுக்குத் தடை?
தன்மய் பட் "ஆல் இந்தியா பேக்சாட்" என்ற காமெடி அமைப்பை நடத்தி வருகிறார். தற்போது இவர் சிறந்த கிரிக்கெட் வீரர் விராத் கோலியா அல்லது சச்சின் டெண்டுல்கரா என்ற பெயரில் ஒரு காமெடி வீடியோவை உருவாக்கியுள்ளார். இதற்கு "சச்சின் வெர்சஸ் லதா சிவில் வார்" என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவில் சச்சினும், லதா மங்கேஷ்கரும் பேசிக் கொள்வது போல சித்தரித்துள்ளார்.
இந்த காமெடி வீடியோவில் பேசப்படும் பேச்சுக்கள் கொச்சையாக உள்ளதாக எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பாஜக மற்றும் மகாராஷ்டிர நவ நிர்மான் சேனா போன்றவை இந்த வீடியோவைத் தடை செய்ய வேண்டும் என்று கோரியுள்ளன.
தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ள நிலையில் இந்த வீடியோவை தடை செய்ய மும்பை காவல்துறை முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக கூகுள் மற்றும் யூடியூபை மும்பை காவல்துறை அணுகியுள்ளது. இந்த வீடியோவுக்கு பெரும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளதைத் தொடர்ந்து இந்த வீடியோவுக்கு தடை வருமா? வராத? என்று பொறுத்திருந்து பார்ப்போம்