ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கவில்லை எனவும், இதன் அதிருப்தி காரணமாக மத்திய அமைச்சரவையில் இருக்கும் தெலுங்கு தேசம் கட்சி அமைச்சர்கள் 2 பேரும் இன்று ராஜினாமா செய்வுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு இன்று தெரிவித்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் ஆந்திராவின் கோரிக்கைகள் குறித்து பிரதமரை தொடர்பு கொள்ள முயன்று முடியாமல் போனது என்றும், மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லியும் தங்கள் கோரிக்கையை நிறைவேற்றவில்லை என்றும் சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டினார்.


கோரிக்கைகளை ஏற்று டெல்லிக்கு பல முறை பயணம் செய்தும் பயனளிக்கவில்லை, எனவே தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசக் கட்சி விலகிகொள்வதாக அவர் தெரிவித்தார்.


இந்த விவகாரம் குறித்து தெலுங்கு தேசக் கட்சி மூத்தத் தலைவர் தெரிவிக்கையில்... மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் அசோக் கஜபதி ராஜூ மற்றும் அறிவியல், தொழில்நுட்ப, மண்ணியல் துறை அமைச்சர் சத்ய நாராயண சவுத்ரி ஆகியோர் தங்களது அமைச்சர் பதவியினை ராஜினாமா செய்யவுள்ளதாக தெரிவித்தார்.


இதனையடுத்து பிரதமர் மோடி மற்றும் சந்திரபாபு நாயுடு ஆகியோர் இன்று பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் இரண்டு அமைச்சர்களும் பிரதமர் மோடி அவர்களை சந்தித்தனர். எனினும் இந்த சந்திப்பில் கூட்டணி குறித்த முடிவில் பாஜக தாரப்பிற்கு நல்ல முடிவு கிடைக்கவில்லை.




இதனையடுத்து மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் அசோக் கஜபதி ராஜூ மற்றும் அறிவியல், தொழில்நுட்ப, மண்ணியல் துறை அமைச்சர் சத்ய நாராயண சவுத்ரி ஆகியோர் தங்களது ராஜினாமா கடிதத்தினை பிரதமரிடம் சமர்பித்தனர்.