ஹைதராபாத் உள்ள ஒரு பள்ளியை சேர்ந்த 11 வயது மாணவியின் பெற்றோர் அம்மாணவியின் சீருடையை துவைத்து காயவைத்துள்ளனர். ஆனால், சீருடை உலராததால் வேறு உடையில் மாணவியை பள்ளிக்கு அனுப்பியுள்ளனர். இந்த சம்பவத்தை மாணவின் டைரியில் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வேறு உடையுடன் பள்ளிக்குச் சென்ற மாணவியை கண்ட ஆசிரியர் சீருடை குறித்து விசாரித்துள்ளார். அம்மாணவி நடந்ததை கூறியதுடன், தனது டைரியில் பெற்றோர் எழுதியதையும் காட்டியுள்ளார். 


ஆனால், இதனை ஏற்றுக்கொள்ளாத அந்த ஆசிரியர், மாணவர்கள் பயன்படுத்தும் கழிவறையில் மாணவியை நிற்க வைத்து தண்டித்துள்ளார்.


இந்த விவகாரம் தற்போது வெளிவந்த நிலையில், ‘நான் கழிவறையில் நிற்கும் போது அனைத்து மாணவர்களும் என்னைப்பார்த்து சிரித்தனர். எனக்கு மிகுந்த அவமானமாக இருந்தது. அந்த பள்ளிக்கு மீண்டும் நான் செல்லமாட்டேன்’ என அந்த மாணவி வேதனையுடன் தெரிவித்துள்ளார்.


இந்த செயலில் ஈடுபட்ட ஆசிரியர் மற்றும் பள்ளி நிர்வாகம் மீதும் சட்டரீதியிலான நடவடிக்கை எடுக்க வேண்டும் என குழந்தைகள் நல ஆர்வலர்கள் வேண்டுகொள் விடுத்துள்ளனர்.