பணம் கொடுக்க மறுத்த தந்தை, இரும்பு கம்பியால் அடித்து கொன்ற மகன்!
தெலங்கானா மாநிலம் ரச்சகொண்டா பகுதியை சேர்ந்த 22-வயது இளைஞன், தத்தையை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார்!
ரச்சகொண்டா: தெலங்கானா மாநிலம் ரச்சகொண்டா பகுதியை சேர்ந்த 22-வயது இளைஞன், தத்தையை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார்!
ரச்சகொண்டா பகுதியில் அரசுபணி பார்த்து ஒய்வு பெற்ற அதிகாரி கிருஷ்ணா. இவர் கடந்த ஜூன் 2017- தனது பணியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். இதனையடுத்து இவர் சுமார் 6 லட்சம் ரூபாய் ஓய்வூதியமாக பெற்றுள்ளார். மேலும் தனது பெயரில் இருந்து நிலத்தினை ரூபாய் 10 லட்சதிற்கு விற்று தனது வங்கி கணக்கில் வைத்திருந்தாள்ளார்.
சில தினங்களின் கிருஷ்ணாவின் மகன் தருண், கிருஷ்ணாவின் வங்கி கணக்கில் இருக்கும் பணத்தினை தனக்கும், இரு சகோதரிகளுக்கும் பகிர்ந்தளிக்குமாறு வலியுறுத்தியுள்ளார். இதனையடுத்து தனது தேவைக்காக 2 லட்சம் மட்டும் வைத்துக்கொண்டு மீத பணத்தினை மக்களுக்கு பகிர்ந்து அளித்துள்ளார்.
இந்நிலையில சமீப காலமாக கிருஷ்ணாவிடம் மீதமிருந்த பணத்தினையும் தருண் வேண்டும் என்று கேட்டதாக தெரிகிறது. பணம் கொடுக்க மறுத்த தந்தையினை இரும்பு கம்பியால் அடித்து கொன்றுள்ளார் தருண்.
இந்த சம்வத்திற்கு கிருஷ்ணாவின் மகள்களும் துணை நின்றதாக வனஸ்திலிபுரம் காவல்துறை ஆணையர் நாராயணன் தெரிவித்துள்ளார். இந்த சம்பத்தினை அடுத்து குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது IPC பிரிவு 302-ன் கீழ் வழக்கு பதிவு செய்து காவல்துறையினை கைது செய்துள்ளனர்.