கடந்த ஞாயிற்றுக்கிழமை தெலுங்கானவில் பாரதீய ஜனதா கட்சியின் கூட்டணி அழைப்புக்கு, தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி (டிஆர்எஸ்) மறுத்துவிட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த சனிக்கிழமை பாரதீய ஜனதா கட்சியின் மாநில தலைவர் டாக்டர் கே. லக்ஷ்மன், தெலுங்கான சட்டமன்ற தேர்தலில் நாங்கள் பெரும்பான்மையை பெறுவோம். எந்தவொரு கட்சியின் உதவியும் எங்களுக்கு தேவையில்லை என்றார். அதேவேளையில் "எந்த கட்சியும் ஒரு தெளிவான பெரும்பான்மையை பெறாத பட்சத்தில், நாங்கள் முக்கிய பங்கு வகிப்போம்," என்று கூறினார்.


மேலும் டி.ஆர்.எஸ். உடன் கூட்டணி குறித்து கட்சியின் மேலிடத்தில் கேட்ட பிறகுதான் முடிவு செய்யப்படும். தேவைப்பட்டால் எங்கள் ஆதரவு தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதிக்கு அளிக்கப்படும். ஆனால் ஏஐஎம்ஐஎம்(All India Majlis-e-Ittehadul Muslimeen) மற்றும் காங்கிரஸ் தலைமையிலான கட்சியுடன் கூட்டணி குறித்து நாங்கள் பேச்சுவார்த்தை நடத்த மாட்டோம்." எனவும் கூறினார்.


இதுக்குறித்து தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் செய்தி தொடர்பாளர் பானு பிரசாத் கூறுகையில், எங்களுக்கு முழு நம்பிக்கை இருக்கிறது, பெரும்பான்மையுடன் மீண்டும் தெலுங்கான மாநிலத்தில் ஆட்சி அமைப்போம். யாருடனும் கூட்டணி அமைக்க வேண்டிதில்லை எனக் கூறினார்.


சமீபத்தில் தெலுங்கான காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியில் இணைந்த மூத்த தலைவர் அப்துல் ரசல் கான், பா.ஜ.க.வுடன் இணைவதற்கு வாய்ப்பு இல்லை என்று கூறியுள்ளார்.