தெலுங்கானாவைச் சேர்ந்த இளம் கைத்தறி நெசவாளர், தீப்பெட்டியில் மடித்து வைக்கக் கூடிய சேலையை நெசவு செய்துள்ளார். இம்மாவட்டத்தில் உள்ள ராஜண்ணா சிர்சில்லா பகுதியைச் சேர்ந்த நல்லா விஜய் என்பவர் பட்டுப் புடவை நெய்துள்ளார். கையால் சேலை நெய்வதற்கு இரண்டு வாரங்கள் ஆகும், அதற்கு 12,000 ரூபாய் செலவாகும். இயந்திரங்களில் நெய்யப்பட்டால், மூன்று நாட்கள் ஆகும். இயந்திரத்தில் நெய்ய 8,000 ரூபாய் செலவாகும். மிக திறமையான நெசவாளரான தனது தந்தை நல்லா பரந்தமுலு அளித்த ஊக்கம் காரணமாக, மகனான நல்லா விஜய்யும் குடும்ப பாரம்பரியத்தை தொடர்கிறார். இவர் கைத்தறியில் சேலைகளை நெசவு செய்து வருகிறார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கையால் நெய்யப்பட்ட இந்த புடவையை பார்த்து அமைச்சர்கள் ஆச்சரியமடைந்தனர்
விஜய், மாநில அமைச்சர்கள் கே. தாரக ராமராவ், பி.சபிதா இந்திராரெட்டி, வி.சீனிவாச கவுட் மற்றும் எரபெலி தயாகர் ராவ் ஆகியோர் கையால் நெய்த அந்த புடவைகளை காட்சிப்படுத்தினர். அனைத்து அமைச்சர்களும் திறமையான இளம் நெசவாளரைப் பாராட்டி, பயன்படுத்திய பொருள் மற்றும் நெசவு செயல்முறை குறித்து கேட்டறிந்தனர்.



தீப்பேட்டியில் மடித்து வைக்கக் கூடிய புடவை பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன், முதல் முறையாக நேரில் பார்க்கிறேன் என்று அமைச்சர்கள் தெரிவித்தனர். நெசவாளரின் கண்டுபிடிப்புகளுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்கப்படும் என அமைச்சர்கள் உறுதியளித்தார். சபீதா இந்திராரெட்டிக்கு விஜய் சேலை பரிசளித்தார்.


ALSO READ | இந்த வேலைகளுக்கு கோடிகளில் சம்பளம் கொடுக்கும் மைக்ரோசாப்ட்..!



மேலும் முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா மற்றும் அவரது மனைவிக்கு புடவை பரிசாக வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து அமைச்சர்களிடம் நெசவாளர் கூறியதாவது: மாநில அரசின் உதவியால் சிர்சில்லாவில் கைத்தறி துறை சமீப காலமாக பல மாற்றங்களை கண்டுள்ளது. சிர்சில்லாவில் உள்ள நெசவாளர்கள் அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் நவீன உபகரணங்களை பயன்படுத்துகின்றனர் என்றார். விஜய் நெய்த புடவை முதன்முதலில் 2017 உலக தெலுங்கு மாநாட்டில் காட்சிப்படுத்தப்பட்டது. 2015-ம் ஆண்டு அப்போதைய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இந்தியா வந்திருந்த போது, ஒபாமாவின் மனைவி மிச்செல் ஒபாமாவுக்கு இந்த சூப்பர் ஃபைன் பட்டுப் புடவையை பரிசாக வழங்கப்பட்டது.


ALSO READ | தமிழகத்தில் பொங்கும் ‘பொங்கலோ பொங்கல்’; மற்ற மாநிலங்களில் 'மகரசங்கராந்தி’..!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR