காசி: தெலுங்கானாவில் இருந்து காசிக்கு புனித யாத்திரை மேற்கொண்ட பெண்மனி ஒருவர் கர்வால் ஹிமாலையாஸ் பகுதியில் இறந்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சுலோட்சனா(63), என்ற தெலுங்கானாவை சேர்ந்த பெண்மனி ஒருவர் காசிக்கு புனிய யாத்திரை மேற்கொண்டுள்ளார். இந்த பயணத்திற்கு இடையில் இவர் கர்வால் ஹிமாலையாஸ் பகுதியில் உள்ள அக்ஷதீப் விடுதியில் தங்கியுள்ளார்.


இந்த விடுதியில் தங்கி இருந்த இவர் இன்று காலை 5 மணியளவில் திடீரென மயங்கி விழுந்துள்ளார். பின்னர் மருத்துவமனைக்கு இவரை எடுத்துச்செல்ல முயற்சிக்கையில் இவர் ஏற்கனவே இறந்துபோனது தெரியவந்துள்ளது.


இதனையடுத்து இந்த விவகாரம் குறித்து விடுதி நிர்வாகம் பட்காட் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். சம்பவயிடத்திற்கு விரைந்த காவல்துறையினர் சடலத்தை மீட்டு ப்ரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்துள்ளனர். இந்த விவகாரம் குறித்து புகார் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


இறந்த பெண்மனி தெலுங்கானாவின் அகமந்ந்குடா பகுதியை சேர்ந்தவர் எனவும், மாரடைப்பு காரணமாகவே இவர் இறந்துள்ளார் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.