ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் இன்று நடைபெற்ற என்கவுண்டரில் தீவிரவாதி ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பந்திபோரா மாவட்டத்தில் இன்று காலை பாதுகாப்பு படையினருடன் நிகழ்ந்த துப்பாக்கி சண்டையில் தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான்.


காஷ்மீரின் பந்திபோரா மாவட்டம் ஹைஜின் பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் காணப்படுவதாக உளவுத்துறைக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தது. 


இதனையடுத்து பாதுகாப்பு படையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்று தீவிரவாதிகளை வேட்டையாடும் பணியை தொடங்கினர். தீவிரவாதிகள் நடமாட்டம் காணப்பட்ட கிராமத்தில் சோதனையின் போது தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர். 


இதில் ராணுவ வீரர் ஒருவர் காயம் அடைந்தார். இதனையடுத்து பாதுகாப்பு படையினர் கொடுத்த பதிலடியில் ஒரு தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான். 


இருதரப்பினருக்கும் இடையில் நடைபெற்ற கடுமையான துப்பாக்கிச் சண்டையில் அந்த தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான். சுட்டுக் கொல்லப்பட்டவன் எந்த தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவன் என்ற உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை.