ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு பழி வாங்கியது யார் தெரியுமா?
நூற்றுக்கணக்கான மக்கள் மீது ஜாலியான்வாலா பாக்கில் நடைபெற்ற படுகொலைக்கு பழி வாங்கிய வீரன் பஞ்சாப் சிங் உதம் சிங்கின் சபதம் நிறைவேறியது எப்படி தெரியுமா?
இந்தியா சுதந்திரம் அடைந்து 73 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. இந்திய அன்னையின் அடிமைச் சங்கிலியை தகர்க்க பல தசாப்தங்களாக நடத்தப்பட்ட வேள்வியில் தங்கள் இன்னுயிரை ஆகுதியாக்கிய தியாகிகளின் பட்டியல் மிகவும் நீளமானது.
அதில் சில சம்பவங்களை எந்நாளும் யாராலும் மறக்க முடியாது. ஜாலியான்வாலா பாக் என்றாலே நினைவுக்கு வருவது பஞ்சாபின் ஒரு நகரம் அல்ல. ஜாலியன் வாலாபாக் படுகொலை. ஜாலியன் வாலாபாக் என்ற மைதானத்தில் கூடியிருந்த மக்கள் நிராயுதபாணிகள். அந்த மக்கள் மீது ஜெனரல் டயர் துப்பாக்கிச் சூடு நடத்தினார்.
1919 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 இல் அந்த பிரிட்டிஷ் ராணுவ அதிகாரியின் தலைமையில் ராணுவத்தினரால் நிகழ்த்தப்பட்ட கொடூரமான தாக்குதலில் பெண்கள், சிறுவர்கள் என பலரும் நூற்றுக்கணக்கில் படுகொலை செய்யப்பட்டனர். கிட்டத்தட்ட 10 நிமிடங்கள் மொத்தம் 379 பேர் இறந்ததாக அன்றைய ஆங்கிலேய அரசு கூறியது. காந்தியடிகளால் அமைக்கப்பட்ட இந்தியக் குழுவின் கணக்கெடுப்பின்படி ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர், இரண்டாயிரத்துக்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
இந்த சம்பவம் ஏற்படுத்திய கனல் ஒரு இளைஞனின் நெஞ்சில் கோபத்தீயை மூட்டியது. அந்த இளைஞன் தான் ஷாஹீத் உதம்சிங்.. ஜாலியன்வாலாபாக் கொடுமை நடைபெற்ற 21 ஆண்டுகளுக்குப் பிறகு லண்டனில் ஜெனரல் டயரை பழிவாங்கினார் உதம் சிங்…
1919 இல் ஜாலியன்வாலா கொடூரம் நடந்தபோது,ஷாஹீத் உதம் சிங்கிற்கு 20 வயது தான் ஆகியிருந்தது. ஆனால், தன் மக்கள் மீது நடத்தப்பட்ட கொடுமைக்கு ஜெனரல் டயரை நிச்சயமாக தண்டிப்பேன் என்று உதம் சிங் சத்தியம் செய்தார்.
மைக்கேல் டயரை பழிவாங்க துடித்த உதம் சிங் 1934 இல் லண்டனுக்குச் சென்றார். ஒரு காரையும், ரிவால்வரையும் வாங்கி தன்னை தயார்படுத்திக் கொண்டு, சரியானவாய்ப்புக்காக காத்திருக்கத் தொடங்கினார் உதம் சிங். அவர், ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்துக் கொண்டிருந்த வாய்ப்பு 1940 மார்ச் 13 அன்று வாய்த்தது ...
சம்பவ தினத்தன்று உதம் சிங் ரிவால்வரை ஒரு ஒரு புத்தகத்திற்குள் பதுக்கி வைத்து, காக்ஸ்டன் ஹாலுக்குள் நுழைந்தார், அங்கு மைக்கேல் டயர் உரை நிகழ்த்திக் கொண்டிருந்தார் ...
ஜாலியன்வாலாபாக்கில் கிடைத்த வாய்ப்பைப் போல மீண்டும் ஒரு வாய்ப்புகிடைத்தால், அதை நிச்சயமாக செய்வேன் என்று டயர் சொன்னார்…
ஜென்ரல் டயர் தனது உரையை முடிப்பதற்கு முன்னதாக மக்களுக்குள் கலந்து அமர்ந்திருந்தஉதம் சிங் எழுந்தார்… ஜலியன்வாலா பாக் கில் பலரின் உயிரைக் குடித்த குற்றவாளிடயரின் உயிரைக் குடித்து, இந்திய மக்களின் மனதில் பால் வார்த்தார்.
21 ஆண்டு காலமாக மனதை பாடாய் படுத்தி உறங்கவிடாமல் செய்துக் கொண்டிருந்த சபதத்தை நிறைவேற்றியபின்னர், உதம் சிங் தப்பி ஓட எந்தவித முயற்சியும்செய்யவில்லை ... மாறாக, தன்னை போலீசிடம் ஒப்படைத்தார் .. லண்டன் நீதிமன்றத்தில், வீரன் உதம் சிங் அன்னை இந்தியா மீதான தனது முழு மரியாதையையும் வெளிப்படுத்தினார்…