கங்கை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துபவர்களுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் தடை விதித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கங்கை இந்தியா மற்றும் வங்கதேச நாடுகளின் வழியாக பாய்கின்ற ஒரு முக்கிய ஆறாகும். இது, இந்தியாவின் தேசிய நதி என்றும் அழைக்கப்படும். இந்து பண்பாடு மற்றும் புராணங்களில் பாகீரதி ஆதாரமாகக் கருதப்படுகிறது.


தற்போது கங்கை மற்றும் அவற்றின் அருகில் உள்ள ஹரித்வார் ஹர் கி பவுரி, ரிஷிகேஷில் உள்ளிட்ட இடங்களில் பிளாஸ்டிக் உறை போன்ற பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் தட்டுகள் மற்றும் கரண்டி போன்றவற்றை பயன்படுத்துபவர்களுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் தடை விதித்துள்ளது.


மேலும், மீறுபவர்கள் மீது ரூ .5000 அபராதம் சுமத்தப்படும் என்றும் அறிவுறித்தியுள்ளது.


அதிக அளவில் பக்தர்கள் வருகை புரிவதால் கங்கைபகுதியில் மாசு ஏற்படுவதாக தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் முன்னதாக முறையிடப்பட்டது. அதை தொடர்ந்து பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது என்பது குறிபிடத்தக்கது.