கடுமையான காற்றுமாசுபாடு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள டெல்லி தற்போது ஓரளவு சீரடைந்து வருகின்றது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டெல்லியில் காற்று மாசுபாடு மிகவும் மோசமான நிலையை அடைந்ததின் காரணமாக டெல்லியை ஒட்டி உள்ள ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் பனிமூட்டம் அடங்கிய மாசுபாடான நிலை பரவி காணப்பட்டது. இந்நிலையில் தற்போது டெல்லி சற்று மாசுகளின் கட்டுப்பாட்டில் இருந்து விளகி வருகின்றது.


இதனால் நகரினுல் கனரக வாகனங்கள் நுழைவதற்கு விதிக்கப்பட்ட தடை உள்ளிட்ட அனைத்து அவசர நடவடிக்கைகளும் விலக்கிக்கொள்ள வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 


மேலும் மாசின் அளவு குறைக்கும் நோக்கில், குறைந்த அளவு மாசு-னை ஏற்படுத்தும், யுரோ 6 தர பெட்ரோல் மற்றும் டீசல் அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் டெல்லியில் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


முன்னதாக இந்த ரக பெட்ரோல் மற்றும் டீசல்-னை, இரண்டு ஆண்டுகள் கழித்தே அறிமுகப்படுத்த  திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் தற்போது நிலவி வரும் மாசுப்பாட்டினை கட்டுப்படுத்த வேண்டி இத்திட்டம் முன்னதாகவே அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது