புதுடெல்லி: டெல்லி (Delhi) உட்பட வட இந்தியா (North India) முழுவதும் குளிர் (Cold) தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை கூட, டெல்லி மக்களுக்கு சாதனை படைத்து வரும் குளிரில் இருந்து எந்த நிவாரணமும் கிடைக்கவில்லை. டெல்லியின் சப்தர்ஜங் பகுதில் காலை 6.10 மணிக்கு 3.6 டிகிரி வெப்பநிலையை (Temperature) பதிவாகி உள்ளது. அதிக பனிமூட்டம் காரணமாக 109 ரயில்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வட இந்தியாவை போருத்ட வரை ஞாயிற்றுக்கிழமை, ஜோத்பூரில் 6.2 டிகிரி, ஜம்முவில் 7 டிகிரி, பாட்டியாலாவில் 6 டிகிரி, சண்டிகரில் 4 டிகிரி, டெஹ்ராடூனில் 4.8 டிகிரி, கங்கநகரில் 6.4 டிகிரி பதிவாகியுள்ளது.


தேசிய தலைநகரில் 1997 முன்பு இருந்த சாதனையை 22 ஆண்டுகளுக்கு பிறகு குளிர் முறியடித்திருந்தாலும், இதுபோன்ற குறைவான வெப்பநிலை கடந்த 100 ஆண்டுகளில் நான்காவது முறையாக மட்டுமே நிகழ்ந்துள்ளது. இந்த மாதத்தில் வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸுக்குக் கீழே சென்றுவிட்டது.


டிசம்பரில் டெல்லியில் மிகக் குறைந்த வெப்பநிலை டிசம்பர் 18 அன்று 12.2 டிகிரி பதிவானது. டிசம்பர் 17 முதல் நாளின் அதிகபட்ச வெப்பநிலை 16° C -க்கு மேல் அதிகரிக்கவில்லை. பனி மூடிய இமயமலை மலைகளில் இருந்து வீசும் குளிர் காற்று காரணமாக, தொடர்ந்து வட மாநிலங்களில் குளிர் நிலவுகிறது.


உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.