அஸாமில் அசம்பாவிதம்: கவுகாத்தியில் இன்றும் ஊரடங்கு உத்தரவு தளர்வு

அஸாம் மாநிலத்தின் கவுகாத்தியில் இரண்டாவது நாளாக இன்றும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டு உள்ளது.
அஸாம் மாநிலத்தின் கவுகாத்தியில் இரண்டாவது நாளாக இன்றும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டு உள்ளது.
பாராளுமன்றத்தில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நிறைவேறியது. இந்த குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு வடகிழக்கு மாநிலங்களில் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்று வருகிறது. மேலும் இந்த மசோதாவுக்கு எதிராக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங், கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆகியோர் குரல் கொடுத்து வருகின்றனர்.
இந்த சட்டத்தால் பூர்வ குடிமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என கூறி வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, அஸ்ஸாம், மேகலாயாவில் போராட்டங்கள் வலுத்து வருகின்றன. அசாமில் நேற்று நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் இரண்டு பேர் பலியாகினர். மேலும், 11 பேர் காயங்களுடன் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், அஸாமின் கவுகாத்தியில் இரண்டாவது நாளாக இன்றும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டு உள்ளது. மேலும், அசாமின் திப்ரூகர் மாவட்டத்தில் இன்று காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டு உள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேசமயம் அஸாமில் இணையதள சேவை நாளை வரை ரத்து செய்யப்பட்டு உள்ளது.