தாஜ்மஹால் போன்று வீடு கட்டி மனைவிக்கு பரிசளித்த கணவன்!
மத்திய பிரதேசத்தில் தன் மனைவி மஞ்சுஷா சௌக்சேவிற்காக தாஜ்மஹால் போன்று வீடு ஒன்றை கட்டி பரிசாக கொடுத்து அவர் மனைவியை மட்டுமல்லாது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
மத்திய பிரேதசம் : ஏழு உலக அதிசயங்களின் பட்டியலில் காதலின் சின்னமாக ஆக்ராவில் உள்ள தாஜ்மஹால் விளங்குகிறது. முகலாய மன்னனான ஷாஜகானால், இறந்து போன அவரது இளம் மனைவி மும்தாஜ் நினைவாக 22,000 பணியாட்களைக் கொண்டு இக்கட்டிடம் கட்டப்பட்டது. புகழ்பெற்ற, பளபளப்பு மங்காத இந்த நினைவுச்சின்னத்தை பார்க்க ஏராளமானோர் திரண்டு வருகின்றனர். இதுபோன்றதொரு பரிசை தான் இந்திய நாட்டைச் சேர்ந்த கணவர் ஒருவர் தன் மனைவிக்கு வழங்கியுள்ளார். மனைவியை தொல்லையாய் நினைக்கும் கணவர்களுக்கு மத்தியில் இவரின் இந்த பெரிய பெரிசு வரவேற்பை பெற்றுள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தின், புர்ஹான்பூர் நகரில் வசிபவர் ஆனந்த் பிரகாஷ் சௌக்சே, தன் மனைவி மஞ்சுஷா சௌக்சேவிற்காக தாஜ்மஹால் போன்று வீடு ஒன்றை கட்டி பரிசாக கொடுத்து அவர் மனைவியை மட்டுமல்லாது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. 6 படுக்கையறைகள், ஒரு சமையலறை மற்றும் ஒரு நுாலக அறை போன்ற அறைகளை கொண்ட இந்த வீடு கிட்டத்தட்ட 8100 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ளது. வங்கதேசத்தில் உள்ள கைவினை கலைஞர்களை கொண்டு இந்த வீடு கட்டப்பட்டுள்ளது.
இந்த வீடு குறித்து அவர் கூறுகையில், ஒரு நாள் அவர் மனைவி மஞ்சுஷா அவரிடம் எனக்காக நீங்கள் என்ன செய்வீர்கள், என்று கேட்டதற்கு நான் உனக்கொரு தாஜ்மஹாலை பரிசளிப்பேன் என்று கூறினேன். அதனாலேயே நான் இந்த வீட்டை கட்ட திட்டமிட்டு இப்போது என் மனைவிற்கு பரிசளித்து இருக்கிறேன். இவரின் இந்த செயல் பல பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
ALSO READ டயட் இருந்து உடல் எடையை குறைத்து உரிமையாளர் வீட்டில் கொள்ளையடித்த திருடன்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR