லக்னோ: உத்திரப்பிரதேச மாநிலம் ஷமிலியில், ரயில்வே தண்டவாளத்தின் ஒன்றில் 12 வயது சிறுவனின் உடல் சடலமாக மீட்டெடுக்கப் பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இறந்த சிறுவனின் நண்பர் ஒருவர் கூறுகையில், இச்சிறுவன் ப்ளுவேல் எனும் ஆன்லைன் விளையாட்டிற்கு அடிமையாகி தற்கொலை செய்துகொண்டதாக தெரிவித்துள்ளார்.


தமிழகத்தில் 3 பேர் உள்பட இதுவரை இந்தியாவில் 7-க்கும் மேற்பட்டோர் ப்ளுவேல் விளையாட்டில் சிக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த சம்பவம் குறித்து காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றது.


ப்ளுவேல் விளையாட்டு என்றால் என்ன?


ஆபத்தான ப்ளுவேல் விளையாட்டு அல்லது நீல திமிங்கிலம் சவால் என்பது ரஷ்யாவில் உருவானது. இவ்விளையாட்டில் பங்கேற்கும் வீரர்கள் 50 கட்டளை பணிகளைத் தொடர்ச்சியாக செய்யவேண்டும், இறுதிகட்ட கட்டளையானது மரணத்தில் முடிவடையும். ஒவ்வொரு கட்டளை செத்த பிறகும் போட்டியின் பங்கேற்பாளர்கள், தாங்கள் பூர்த்தி செய்யப்பட்ட கட்டளை அல்லது சவால்களின் புகைப்படங்களினை பகிர்ந்து கொள்ள வேண்டும்.


திகில் திரைப்படம் பார்த்தல், அசாதாரண மணி நேரங்களில் விழித்துகொள்ளுதல் போன்றவை இந்த கட்டளைகளுக்குள் அடங்கும்.


இந்த விளையாட்டு பல்வேறு நாடுகளில் நூற்றுக்கணக்கான இளைஞர்களின் உயிர்களைக் பறித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.