நாடுமுழுவதும் பட்டாசு வெடிக்கவோ, தயாரிக்கவோ தடை இல்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.....


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பட்டாசுகள் வெடிப்பதால் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுவதாலும், காற்று மாசு, சுவாசக் கோளாறு ஏற்படுவதாலும், பட்டாசு தயாரிப்பு, விற்பனை, பாதுகாத்து வைத்தலுக்குத் தடை விதிக்க வேண்டும் என உச்சநீதிமனறத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.


இதற்கு எதிராகப் பட்டாசு உற்பத்தியாளர்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டது.  வழக்கு விசாரணையின்போது, பட்டாசுத் தொழில் செய்வதற்கான உரிமையும் பாதிக்கப்படக்கூடாது, 130 கோடி மக்களின் உடல்நலம் பாதிக்கப்படக்கூடாது, இரண்டுக்கும் இடையே சமநிலை உண்டாக்குவது அவசியம் என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.   


பட்டாசுத் தொழிலை நசுக்கும் வகையில் நாடு தழுவிய தடை விதிக்கக் கூடாது என்றும், அரசின் கண்காணிப்புடன் பட்டாசுகள் வெடிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் பட்டாசு ஆலைகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.


இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், கடந்த ஆகஸ்ட் மாதம் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தனர். இந்நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என தெரிவித்திருந்த நிலையில் உச்சநீதி மன்றம் தீர்ப்பு வழகியுள்ளது.  


அந்த தீர்ப்பில், நாடுமுழுவதும் பட்டாசு வெடிக்கவோ அல்லது தயாரிக்கவோ தடை இல்லை என்றும் ஆன்லைனில் பட்டாசுகள் விற்பதற்கு அனுமதி இல்லை என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும், குறிப்பிட்ட அளவிலான சத்தத்தை ஏற்படுத்த கூடிய வகையிலான பட்டாசுகளை மட்டுமே வெடிப்பதற்கும், விற்பதற்கும் அனுமதி என்று தெரிவித்துள்ளது. 


மத்திய அரசின் கட்டுப்பாடுகளுடன் பட்டாசு உற்பத்தி விறபனைக்கு அனுமதி என்றும் குறிப்பிட்டுள்ளது. பட்டாசு உற்பத்தியில் மத்திய அரசின் கட்டுபாடு: அதிக மாசு, புகை, சத்தம் ஏற்படுத்தும் வகையிலான பட்டாசுகளை தயாரிக்க கூடாது என்று மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. இந்த விதியை மீறுபவர்களின் பட்டாசு உரிமத்தை ரத்து செய்யவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.