கலைக்கு மொழி தடையில்லை... எங்கள் படங்களையும் ரசியுங்கள் - அஜய் தேவ்கனுக்கு நடிகை பதிலடி
கலைக்கு மொழி தடையில்லை என அஜய் தேவ்கனுக்கு நடிகை திவ்யா பதிலடி கொடுத்துள்ளார்.
கன்னட நடிகர் சமீபத்தில் திரைப்பட விழா ஒன்றில் கலந்துகொண்டார். அப்போது அவரிடம் கேஜிஎஃப் 2 படம் குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “கேஜிஎஃப் 2 பான் இந்தியா படமாக உருவாகி இருக்கிறது. கன்னடம் உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் பான் இந்தியா படங்கள் உருவாக ஆரம்பித்திருப்பதால் இந்தி இனி தேசிய மொழியாக இருக்க முடியாது” என்றார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன்,தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்தி தேசிய மொழி இல்லை என்றால் உங்கள் தாய்மொழி படங்களை ஏன் இந்தியில் டப் செய்து வெளியிடுகிறார்கள். இந்திதான் நமது தேசிய மொழியாக இருந்தது இருக்கிறது, இனிமேலும் இருக்கும்” என இந்தியில் பதிவிட்டிருந்தார்.
இதனையடுத்து கிச்சா சுதீப் தன் ட்விட்டர் பக்கத்தில், “இந்தியை மதித்து நேசித்து கற்றுக்கொண்டு இருந்ததால் அவர் இந்தியில் எழுதி இருந்தது எனக்கு புரிந்தது. ஒரு வேளை கன்னடத்தில் நான் பதிவிட்டிருந்தால் அதை எப்படி புரிந்துகொள்வீர்கள்” என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
இருவருக்குமான இந்த உரையாடல் பெரும் விவாதப் பொருளாக மாறியது. அதுமட்டுமின்றி அஜய் தேவ்கனுக்கு எதிராக பலரும் தங்களது கருத்தை தொடர்ந்து கூறிவருகின்றனர்.மேலும் #StopHindiImposition என்ற ஹேஷ்டேக்கும் ட்ரெண்டானது.
அந்தவகையில் நடிகை திவ்யா இந்த விவகாரம் குறித்து தன் ட்விட்டர் பக்கத்தில், “அஜய் தேவ்கனின் அறியாமை திகைப்பூட்டுகிறது. இந்தி தேசிய மொழி கிடையாது. கேஜிஎஃப் 2, புஷ்பா, ஆர்ஆர்ஆர் ஆகிய படங்கள் இந்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது மகிழ்ச்சியளிக்கிறது.
கலைக்கு மொழி தடையில்லை. உங்கள் படங்களை நாங்கள் ரசிப்பதுபோல் எங்கள் படங்களையும் ரசியுங்கள்” என பதிவிட்டுள்ளார்.
மேலும் படிக்க | கொரோனா 4ம் அலை தொடங்கிவிட்டதா; வெளியானது அதிர்ச்சி ரிப்போர்ட்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR