`இது இடைக்கால பட்ஜெட் அல்ல. பிரச்சார உரை` -பா.சிதம்பரம்!
பாராளுமன்றத்தில் இன்று நடைப்பெற்ற இடைக்கால நிதிநிலை அறிக்கை, தேர்தல் பிரச்சார ஒத்திகை என முன்னாள் நிதியமைச்சர் பா.சிதம்பரம் விமர்சித்துள்ளார்!
பாராளுமன்றத்தில் இன்று நடைப்பெற்ற இடைக்கால நிதிநிலை அறிக்கை, தேர்தல் பிரச்சார ஒத்திகை என முன்னாள் நிதியமைச்சர் பா.சிதம்பரம் விமர்சித்துள்ளார்!
பரபரப்பான அரசியல் சூழலில் நேற்று பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கூடியது. வரும் 13-ஆம் தேதி வரை நடைப்பெறும் இந்த கூட்டத்தொடர், 2019-ஆம் ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால், இரு அவைகளின் கூட்டு கூட்டம் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் நடைப்பெற்றது.
இந்நிலையில் இன்று பாராளுமன்ற மக்களவையில் இடைக்கால பட்ஜெட்டை நிதி அமைச்சர்(பொறுப்பு) பியூஷ் கோயல் தாக்கல் செய்தார். 5 லட்சம் வரையில் வரி விலக்கு, விவசாயிகளுக்கான நல திட்டம் என பல அம்சங்களை இந்த நிதிநிலை அறிக்கை கொண்டிருந்தது. எனினும் எதிர்கட்சிகள் இந்த அறிக்கையினை விமர்சித்து வருகின்றனர்.
அந்த வகையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கை வரும் தேர்தலுக்கான ஒத்திகை போன்று இருந்தது என முன்னாள் நிதி அமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான பா.சிதம்பரம் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்து பியூஷ் கோயல் உரையாற்றியது தேர்தல் பிரச்சாரம் போல் இருந்தது எனவும் அவர் விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கதில் பதிவிட்டுள்ளதாவது...