உ.பி., முதல்வராக பதவி ஏற்றுள்ள யோகி ஆதித்யாநாத் அடுத் தடுத்து அதிரடியான உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அவர் முதல் அமைச்சராக பொறுப்பேற்ற மறுநாளே உத்தரபிரதேசம் முழுவதும் அனுமதி பெறாத மாட்டிறைச்சி வெட்டும் கடைகள் மூடப்பட்டன.


இந்நிலையில் உ.பி., முதல்வர் யோகி ஆதித்யாநாத் கோரத்பூரில் நேற்று நடந்த பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அவர்,  அரசு ஊழியர்களும், பாஜக வினரும் தினமும் 18 மணி நேரம் முதல் 20 மணி நேரம் வரை உழைக்க வேண்டும். இதற்கு நம்மை பழக்கப்படுத்தி கொள்ள வேண்டும். 


20 மணி நேரம் உழைக்க தயாராக இல்லாதவர்கள் தங்கள் பொறுப்புகளில் இருந்து விலகி, மற்றவர்களுக்கு வழி விட வேண்டும். உத்தரபிரதேசத்தில் அரசியில்வாதிகளின் நிழலில் இருக்கும் கிரிமினல்கள் இன்றே மாநிலத்தை விட்டு வெளியேற வேண்டும் இல்லையெனில் ஜெயிலில் தள்ளப்படுவீர்கள்.


உத்தரபிரதேச மக்கள் நிறைய எதிர்பார்த்து எங்களுக்கு வாக்களித்துள்ளனர். எனவே நாங்கள் பணியாற்ற அரசு ஊழியர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று முதல்வர் யோகி ஆதித்யாநாத் கூறினார்.


அவர் மேலும் கூறுகையில், இன்னும் 2 ஆண்டுகளுக்கு நாம் ஓய்வின்றி உழைக்க வேண்டும். அப்படியானால் தான் மக்கள் நலத் திட்டங் களை முழுமையாக செயல் படுத்த முடியும் என்று கூறியுள்ளார்.