வந்தே மாதரத்தை ஏற்றுக்கொள்ள முடியாதவர்களுக்கு இந்தியாவில் வாழ உரிமை இல்லை என பிரதாப் சாரங்கி தெரிவித்துள்ளார்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜம்மு-காஷ்மீரில் 370 வது பிரிவை ரத்து செய்ததை எதிர்த்ததற்காக காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறிய மத்திய அமைச்சர் பிரதாப் சந்திர சாரங்கி, வந்தே மாதரம் என்று சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாதவர்களுக்கு இந்தியாவில் வாழ உரிமை இல்லை என்று கூறியுள்ளார்.


370 வது பிரிவை ரத்து செய்தது குறித்து புவனேஸ்வரில் நடந்த ஜன ஜாக்ரான் சபையில் பேசிய சாரங்கி, “பிரதமர் நரேந்திர மோடியின் 370 வது பிரிவை ரத்து செய்வதற்கான முடிவை பாஜகவின் தீவிர எதிர்க்கட்சிகள் ஆதரித்தபோது, காங்கிரஸ் அதை எதிர்த்தது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (Pok) மற்றும் சியாச்சின் ஆகியவை இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்பதை உள்துறை அமைச்சர் அமித்ஷா, காங்கிரசிடம் தெளிவாக கூறியுள்ளார்.


இந்தியாவின் தேசிய பாடலான வந்தே மாதரம் பாடலை ஏற்காதவர்கள், இந்தியாவில் வாழ தகுதியற்றவர்கள் என அவர் கூறினார். மேலும், 72 ஆண்டுகளுக்கு பிறகு, காஷ்மீர் மக்களுக்கான முழு உரிமையையும், மோடி தலைமையிலான அரசு வழங்கியுள்ளது. தற்போது, அந்த மாநிலத்தில் முழு அமைதி நிலவி வருகிறது. காஷ்மீரில் நிலம் வாங்குவது துவங்கியுள்ளன. சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதை உலக நாடுகள் ஏற்று கொண்டுள்ளன. ஆனால், சில கும்பல் மற்றும் பயங்கரவாத ஆதரவாளர்கள், சிறப்பு சட்டம் நீக்கத்தால், பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால், தான் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். 
சிறப்பு சட்டம் நீக்கத்திற்கு பின்னர், மனித உரிமை மீறப்படுவதாக குற்றஞ்சாட்டுகின்றனர். ஆனால், அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த நூற்றுக்கணக்கான வீரர்கள், தாக்குதலில் உயிரிழந்த போது, பயங்கரவாத ஆதரவாளர்கள் அதனை பற்றி கவலைப்படவில்லை" என அவர் தெரிவித்தார். 


இந்நிகழ்ச்சியில், கால்நடை நலத்துறை, சிறுகுறு நடுத்தர தொழில்துறை இணை அமைச்சர், மத்திய ஜல் சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தும் கலந்து கொண்டார்.