வீட்டில் இருந்த படி மொபைல் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு, 3 புதிய சுலபமான வசதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பல்வேறு சேவைகளுக்கு ஆதார் எண் அளிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், மொபைல் எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என, மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. இதற்கான கால அவகாசம், அடுத்த ஆண்டு பிப்ரவரி 6-ம் தேதி வரை வழங்கப்பட்டுள்ளது. 


இந்நிலையில் மொபைல் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு, 3 புதிய சுலபமான வசதிகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன.


> OTP எனப்படும் எஸ்.எம்.எஸ். மூலம் வரும் தற்காலிக குறியீட்டு எண் மூலம் இணைக்கலாம்.


> மொபைல் அப்ளிகேஷன் மூலம் இணைப்பது. 


> IVRS எனப்படும் போன் அழைப்பில் குரல் பதிவின் வழிகாட்டலை பின்பற்றி இணைப்பது.