வருகின்ற பிப்.,27 ஆம் நாம் நாகாலாந்து மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடைப்பெற இருப்பதை அடுத்து, ஆளும் நாகா மக்கள் முன்னணி(NPF) கட்சியின் 3 MLA-க்கள் தங்கள் பதவியினை ராஜினாமா செய்தனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முன்னதகா இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையின் படி, வரும் பிப்., 18 அன்று திரிபுராவிலும், பிப்., 27 ஆம் தேதி மேகாலயா மற்றும் நாகாலாந்திலும் சட்டமன்ற தேர்தல்கள் நடத்தப்படவுள்ளன.


இந்நிலையில் நாகாலாந்து மாநிலத்தில் ஆளும்  நாகா மக்கள் முன்னணி(NPF) கட்சியின் 3 MLA-க்கள் Dr லோங்கிரிநேக்கன், எல் கொஹுமோ கைமுன்ஜன் மற்றும் புகாஹி ஹுமி ஆகியோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர் என நாகாலாந்த சட்டமன்ற ஆசையர் என் பெஞ்சமின் தெரிவித்துள்ளார்.


முன்னதாக கடந்த ஜன.,31 அன்று எல் கொஹுமோ கைமுன்ஜன் ராஜினாமாவானது ஏற்றுக்கொள்ளப் பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். 


இவர்களின் ராஜினாமாவை அவைத்தலைவர் இம்டியவப்ங் ஏற்றுக்கொண்டார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.