திருப்பதி கோவில் கூட்ட நெரிசல்: உயிர் போராட்டம், சிதறியடித்து ஓடிய பக்தர்கள்.... பீதியை கிளப்பும் வீடியோ
Tirupati Temple Stampede Latest News: திருப்பதியின் நடந்த இந்த சம்பவம் நாடு முழுதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கூட்ட நெரிசலின் புகைப்படங்களும், கடுமையாக காயமடைந்தவர்களின் உயிரை காப்பாற்ற அங்கிருந்த பக்தர்கள், கோவில் நிர்வாகத்தினர் மற்றும் காவல் துறையினர் எடுத்த முயற்சிகளின் சில வீடியோக்களும் இணையத்தில் பரவி வருகின்றன.
Tirupati Temple Stampede Latest News: திருப்பதி கோவில் கூட்ட நெரிசலால் பல அப்பாவி உயிர்கள் பறிபோன சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த நெரிசலில் சிக்கி ஏராளமானோர் காயமடைந்துள்ள நிலையில், அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் பணிகள் முழு மூச்சுடன் நடந்து வருகின்றன.
இந்தியாவில் மிக பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாக உள்ள திருப்பதி ஏழுமலையான் கோயில் தினம் தினம் திருவிழா பொல் காட்சியளிக்கும் ஒரு ஆன்மிக தலமாக உள்ளது. வார விடுமுறை நாட்கள், பெருமாளுக்கு விசேஷ நாட்கள், புரட்டாசி மாதம், மார்கழி மாதம் என இந்த சமயங்களில் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாகவே இருப்பதுண்டு.
பெருமாளுக்கு மிகவும் உகந்த நாளான வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, திருப்பதியில் சொர்க்கவாசல் நிகழ்ச்சிக்கு இலவச டிக்கெட் வழங்கப்பட்டது. இதை வாங்குவதற்கு ஏராளமான மக்கள் கோவில் வளாகத்தில் கூடி இருந்தனர். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிர் இழந்தனர். 30 க்கும் மேற்பட்டோர் காயமடந்ததாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஜனவரி மாதம் 8ம் தேதி, புதன்கிழமை, டிக்கெட்டுகள் வாங்க பக்தர்கள் காத்திருந்தபோது இந்த அசம்பாவிதம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், திருப்பதியின் நடந்த இந்த சம்பவம் நாடு முழுதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கூட்ட நெரிசலின் புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் பரவி வருகின்றன.
கடுமையாக காயமடைந்தவர்களின் உயிரை காப்பாற்ற அங்கிருந்த பக்தர்கள், கோவில் நிர்வாகத்தினர் மற்றும் காவல் துறையினர் எடுத்த முயற்சிகளின் வீடியோக்கள் மனதை உலுக்கும் வகையில் உள்ளன.