Pegasus: மாநிலங்கள் அவையில் அமளி; IT அமைச்சர் அறிக்கையை கிழித்து எறிந்த TMC MP
நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடரில், இன்று, திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சாந்தனு சென் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவின் அறிக்கையை கிழித்து எறிந்தார்.
புதுடெல்லி: பெகாசஸ் விவகாரம் தொடர்பாக மாநிலங்களவையில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. பெகாசஸ் திட்டம், விவசாயிகளின் போராட்டங்கள் போன்றவை குறித்து விவாதிக்க, நாடாளுமன்ற பணிகள் ஒத்திவைக்கப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோரியதால் மாநிலங்களவை நடவடிக்கைகள் வியாழக்கிழமை ஒத்திவைக்கப்பட்டன.
இரண்டு முறை ஒத்திவைப்புகளுக்குப் பிறகு, மதியம் 2 மணிக்கு சபை கூடியபோது, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பெகாசஸ் பிரச்சினையில் அறிக்கையை வெளியிட அனுமதிக்கவில்லை. அவையில் பெருத்த கூச்சலும், குழப்பமும் நிலவியது. அப்போது திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சாந்தனு சென் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவின் அறிக்கையை கிழித்து எறிந்தார்.
பாராளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளிலிருந்து, எதிர்க்கட்சிகள் பெகாசஸ் பிரச்சினை உள்ளிட்ட வேறு சில விஷயங்களில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தொடர்ந்து அமளியை ஏற்படுத்தி வருகின்றன. இன்றும் கூட, எதிர்க்கட்சி உறுப்பினர்களின் சலசலப்புக்கு மத்தியில் மாநிலங்கள் அவையில், tஹொழில்நுட்ப அமைச்சர் வைஷ்ணவ், பெகாசஸ் (pegasus) தொடர்பான அறிக்கையை வெளியிடத் தொடங்கினார். அவர் அந்த அறிக்கையை அளிக்கும்போது, நாற்காலியின் முன்னால் நின்று கொண்டு அமளியை ஏற்படுத்திய திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சாந்தனு சென், தகவல் தொழில்நுட்ப அமைச்சரிடமிருந்து அறிக்கையை பறித்து கிழித்து எறிந்தார். அமளி காரணமாக, வைஷ்ணவ் அவருக்கு தனது அறிக்கையை முழுமையாகப் படிக்க முடியவில்லை.
ALSO READ | Pegasus Spyware: உளவு பார்க்கும் ஸ்பைவேர் குறித்த பகீர் தகவல்கள்
இஸ்ரேலிய ஸ்பைவேர் பெகாசஸ் மூலம் இந்தியர்களை உளவு பார்த்ததாக கூறப்படுவது குறித்து கூறிய தக்வல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், மாநிலங்களவையில் கூறுகையில், நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடருக்கு சற்று முன்னர் இதுபோன்ற கவிவகாரம் பேசப்படுவது, இந்திய ஜனநாயகத்தின் பெயரை களப்படுத்தும் சதி திட்டம் ஆகும். நாட்டில் ஏற்கனவே கட்டுப்பாட்டு மற்றும் கண்காணிப்பு முறைமை இருக்கும் போது சட்டவிரோத கண்காணிப்பு சாத்தியமில்லை என்று கூறினார்.
ALSO READ | Pegasus: உளவு பார்த்ததாக கூறவில்லை என அம்னெஸ்டி இண்டர்நேஷனல் அடித்த பல்டி
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR